கம்பராமாயணம் 947 · பால 14.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கல் இயங்கு - மலையில் வாழுகின்ற, கருங் குற மங்கையர் - கரிய குறத்தியர்; அங்குக் கல்லி அகழ் - அம் மலையில் தோண்டி, காமர் கிழங்கு எடா - அழகான கிழங்குகளை எடுப்பதற்காக; வல்லியங்கள் நெருங்கு - புலிகள் நெருங்கி வாழும்; மருங்கு எலாம் - மலைப் பக்கங்களிலெல்லாம்; வல் இயங்கள் - (அவற்றை விரட்ட) வலிய பறைக் கருவிகள்; நெருங்கி மயங்கும் - மிகுதியாக ஒலிக்கும்.
குறத்தியர் கிழங்குகளைத் தோண்டி எடுக்கவேண்டிய பருவமாதலால் குறவர் பலவகைக் கோற்கருவிகளை முழக்குகின்றனர் என்றார். எடா - செய்யா என்னும் வினையெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that the dark hill women who roam the rocks
- can dig there and take up the lovely tubers,
- on every side where the tigers crowd,
- strong drums press close and mingle their din.
What the poem says
It is the season when the hill women go out to dig edible roots. Tigers live thickly on the slopes, so the hill men beat loud drums on every side to drive them off while the women dig.
The verse again pairs lines of nearly identical sound with different meanings: kalliyaṅku and kalli aṅku, valliyaṅkaḷ "tigers" and val iyaṅkaḷ "strong instruments".