கம்பராமாயணம் 9420 · யுத்த 30.69
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சூரியன் சேயும் - அனுமனுக்கும் வீடணனுக்கும் இராமன் இட்ட கட்டளை கேட்டு நின்ற சுக்கிரீவனும்; செல்வன் சொற்றதே எண்ணும் சொல்லன் - இராமபிரான் என்ன சொன்னானோ அதனையே நினைக்கின்ற தன்மை உடையவன் ஆதலால்; ஆரியன் பின்பு போனான் - (இராமன் வாயால் சொல்லுமுன்பே) இலக்குவன் பின் போனான்; அனைவரும் அதுவே நல்ல காரியம் என்னக் கொண்டார் - அவன் செய்கையைப் பார்த்த எல்லாரும் அதுவே நல்ல செயல் என முடிவு கட்டினவராய்; கடற்படை காத்து நின்றார் - கடல்போல் பரந்த வானரப் படையைக் காத்து நின்றார்கள் (எனவே யாவரும் போய்விட இராமன் தனியே மூல பலத்தை எதிர்க்க நின்றான்.); வீரியன் பின்னர்ச் செய்த செயல் எலாம் விரிக்கலுற்றாம் - வீரனாகிய இராமன் அதன்மேல் செய்த செயல்களையெல்லாம் விரித்துரைக்கலானோம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The Sun's son too, a man whose words follow only what his Lord has said,
- went after the noble one; all of them, holding that this was
- the right course, stood guarding the sea-like army;
- now we set out to tell all that the valiant one did after.
What the poem says
Cukkirīvaṉ, son of the Sun, always thinks only of what Irāmaṉ has said, so he too follows Ilakkuvaṉ without waiting to be told. All the others agree this is best and take up guard over the vast monkey army.
So Irāmaṉ is left to face the Mūlapalam alone. The poet announces that he will now relate in full what Irāmaṉ did.