கம்பராமாயணம் 9428 · யுத்த 30.77

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
"
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தேரும், மாவும், யானையோடு சீயம், யாளி ஆதியா
மேரு மானும் மெய்யர்நின்ற வேலை, ஏழின் மேலவாம்;
"வாரும், வாரும் " என்று அழைக்கும் மானுடற்கு, இம் மண்ணிடைப்
பேருமாறும், நம்முழைப் பிழைக்குமாறும் எங்ஙனே?

பொருள் · Meaning in Tamil

தேரும் மாவும் யானையோடு சீயம் யாளி ஆதியா - தேர் குதிரை யானைகளோடு சிங்கங்கள் யாளி முதலானவையும்; மேரு மானும் மெய்யர் - மேரு மலை போன்ற பெரிய உடல் கொண்டவர்களுமாய்; ஏழின் வேலை மேலவா நின்ற - ஏழு கடல்களுக்கும் அதிகமான பரப்போடு அமைப்போடு (படைகள் பெருக) நின்றன; (எனினும்) வாரும் வாரும் என்று அழைக்கும் மானுடற்கு - போர் செய்ய வாருங்கள் என்று அழைக்கும் மனிதனுக்கு எதிராக; இம்மண்ணிடைப் பேருமாறும் - (போர் செய்து) இந்த உலகத்திலே தப்பிப் போகும் வகையும்; நம் முழைப் பிழைக்குமாறும் - நம்மிடையே உள்ளவர்கள் உயிர்தப்பிப் பிழைக்கும் வகையும்; எங்ஙனே - எப்படி?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Chariots, horses and elephants, with lions, yāḷis and the rest,
  2. and warriors with bodies like Mēru stand here, more than the seven seas;
  3. yet against this man who calls 'Come on, come on!',
  4. how can any of us get away on this earth, or escape with our lives?"

What the poem says

The demons' admiration turns to foreboding. Their army has chariots, horses, elephants, lions and yāḷis (mythical lion-like beasts), and warriors as huge as Mount Mēru, a force greater than the seven seas. Yet facing this one man who keeps challenging them to come at him, they wonder how any of them will get out of this alive.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tērum, māvum, yāṉaiyōṭu cīyam, yāḷi ātiyā
mēru māṉum meyyar niṉṟa vēlai, ēḻiṉ mēlavā
"vārum, vārum " eṉṟu aḻaikkum māṉuṭaṟku, im maṇṇiṭaip
pērumāṟum, nammuḻaip piḻaikkumāṟum eṅṅaṉē?