கம்பராமாயணம் 9429 · யுத்த 30.78

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்று சென்று, இரைத்து எழுந்து, ஓர் சீய ஏறு அடர்ந்ததைக்
குன்று வந்து சூழ்வளைத்த போல், தொடர்ந்து கூடலும்,
'நன்று இது 'என்று, ஞாலம் ஏழும் நாகம் ஏழும் மானும்தன்
வென்றி வில்லை வேதநாதன் நாண் எறிந்த வேலைவாய்.

பொருள் · Meaning in Tamil

படி அரக்கர்கள் மேலே சென்று; இரைத்து அடர்த்து - ஆரவாரம் செய்து தாக்க முனைந்து; ஓர் சீய ஏறு அடர்ந்ததை - ஓர் ஆண்சிங்கம் தாக்க வந்ததை; குன்று சூழ் வளைந்தபோல் - மலைகள் சூழ்ந்து வளைத்துக்கொண்டது போல்; தொடர்ந்து கூடலும் - அரக்கர் சேனை மேன்மேல் கூடியதும்; வேதநாதன் - மறைகளின் தலைவனாகிய இராமபிரான்; ஞாலம் ஏழும் நாகம் ஏழும் மானும் தன் வென்றி வில்லை - ஏழு உலகங்களையும் ஏழு மலைகளையும் ஒத்ததாகியதும் வெற்றிக்கே உரியதுமான தன் கோதண்டம் என்ற வில்லினது; நாண் எறிந்த வேலைவாய் - கயிற்றினை இறுக்கித் தெறித்தபோது (தொடரும்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Saying this, they went at him, pressing in and roaring, and as they kept massing round
  2. like mountains closing in about a lion that charges,
  3. the Lord of the Vedas said, "This is good," and at the moment he twanged the string
  4. of his victorious bow, equal to the seven worlds and the seven mountains,

What the poem says

The demons surge forward with a roar and close round Irāmaṉ, like mountains ringing a charging lion. Irāmaṉ, Lord of the Vedas, welcomes it as a fine chance and plucks the string of his bow, which is as mighty as the seven worlds and the seven mountains.

The sentence runs on into the next verse, which tells what happened at the sound of that bowstring.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu ceṉṟu, aṭarttu iraittu, ōr cīya ēṟu aṭarntataik
kuṉṟu vantu cūḻ vaḷaintapōl, toṭarntu kūṭalum,
'naṉṟu itu 'eṉṟu, ñālam ēḻum nākam ēḻum māṉum taṉ
veṉṟi villai vēta nātaṉ nāṇ eṟinta vēlaivāy.