கம்பராமாயணம் 9431 · யுத்த 30.80

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வெறித்து இரிந்த வாசியோடு, சீய மாவும் மீளியும்,
செறித்து அமைந்த சில்லி என்னும் ஆழிகூடு தேர் எலாம்
முறித்து எறிந்து முந்த, யானை வீசும் மூசு பாகரைப்
பிறித்து இரிந்து சிந்த, வந்து ஒர் ஆகுலம் பிறந்ததால்.

பொருள் · Meaning in Tamil

வெறித்து இரிந்த வாசியோடு - அஞ்சி மருண்டு ஓடிய குதிரைகளோடு, சீய மாவும் - சிங்கமாகிய விலங்குகளும்; மீளியும் - பேய்களும்; செறித்து அமைந்த சில்லி என்னும் ஆழி கூடு தேரெலாம் - நன்கு செறிவுற அமைக்கப்பட்ட சில்லி என்னும் சக்கரங்கள் சேர்ந்த தேர்களையெல்லாம்; முறித்து எழுந்த - முறித்து முன்னேறி ஓடின; முற்கை யானை - முன்னே (தொங்கும்) துதிக்கையுடைய யானைகள்; வீசும் மூசு பாகரை - (அங்குசம்) வீசி நெருங்குகின்ற பாகர்களை; பிறித்து இரிந்து சிந்த - பிரித்து ஓடிச் சிதறும்படியாக; ஓர் ஆகுலம் வந்து பிறந்தது - ஒரு துயரம் வந்து தோன்றியது.

ஆல் - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Along with the horses that bolted in terror, the lions and the mīḷis
  2. broke all the chariots fitted with close-set wheels called cilli and charged off;
  3. the elephants with forward-hanging trunks threw off the mahouts who pressed upon them with goads
  4. and fled scattering; and a great tumult arose.

What the poem says

The panic spreads through the demon army. Horses bolt; the lions and the demonic beasts called mīḷi smash the well-built chariots as they break away; the elephants shake off their mahouts, who are trying to control them with goads, and run in all directions. Utter confusion takes hold of the host.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veṟittu irinta vāciyōṭu, cīya māvum mīḷiyum,
ceṟittu amainta cilli eṉṉum āḻi kūṭu tēr elām
muṟittu eḻunta muṟkai yāṉai vīcum mūcu pākaraip
piṟittu irintu cinta, vantu ōr ākulam piṟantatāl.