கம்பராமாயணம் 9433 · யுத்த 30.82
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆளிமேலும் - அரக்கர் படையில் வந்த சிங்கங்களின் மீதும்; ஆளின் மேலும் - காலாட்படை வீரர்கள் மீதும்; ஆனை மேலும் - யானைகள் மீதும்; ஆடல் மா மேலும் - ஆடுகின்ற குதிரைகள் மீதும்; மீளி மேலும் - பேய்கள் மீதும்; வீரர் மேலும் - வீரர்கள் மேலும்; வீரர் தேரின் மேலும் - வீரர்கள் செலுத்தி வந்த தேரின் மேலும்; வெவ் வாளி மேலும் - அரக்கர் ஏவிய கொடிய அம்புகளின் மீதும்; வில்லின் மேலும் - அந்த அம்புகளை எய்த விற்களின் மேலும்; மண்ணின் மேல் வளர்ந்த மாத்தூளி - போர்க்கள நிலத்தில் மேலும் மேலும் பெருகிய பெருந் தூசிப்படலம்; மேலும் ஏற ஏற - மேன்மேல் ஏறிப் பெருகும்படியாக; வீரன் - இராமபிரான்; வாளி தூவினான் - அம்புகளை (எங்கெங்கும்) சிதறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On the lions, on the foot soldiers, on the elephants, on the prancing horses,
- on the mīḷis, on the warriors, on the warriors' chariots, on their cruel
- arrows, on their bows, while the great dust that rose from the ground
- climbed higher and higher, the hero showered his arrows.
What the poem says
Irāmaṉ's arrows fall on everything at once: the lions, the infantry, the elephants, the dancing horses, the demon beasts, the warriors and their chariots, and even the arrows and bows of the enemy. The dust of battle rises higher and higher as he scatters his shafts. The verse imitates the onslaught with its relentless repetition of "on ... on ...".