கம்பராமாயணம் 9434 · யுத்த 30.83
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மான யானை - பெருமை மிக்க யானைகள்; மலை விழுந்த வா விழுந்த - மலைகள் விழுந்ததுபோல விழுந்தன; தாய வாசி - தாவிச் செல்லும் குதிரைகள்; மள்ளர் செந்தலை விழுந்தவா விழுந்த - அரக்க வீரர்களின் சிவந்த (குடுமியுடைய) தலைகள் விழுந்ததுபோல விழுந்தன; திண் பதாகை - வலிய கொடிகள்; தாள் அறும் சிலை விழுந்த வா விழுந்த - அடிப்பகுதி அறுபட்ட விற்கள் விழுந்ததுபோல் விழுந்தன; வெள் எயிற்ற காடு எலாம் - யானைத் தந்தங்களும் அரக்கர்களின் கோரைப் பற்களும் ஆகிய தொகுதிகள்; திங்களின் கலை விழுந்தவா விழுந்த - சந்திர கலைகள் விழுந்தது போல் விழுந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The proud elephants fell as mountains fall; the leaping horses
- fell as the red heads of warriors fall; the sturdy banners fell
- as bows fall when their lower ends are cut; and all the forests of white tusks
- fell as the crescent phases of the moon might fall.
What the poem says
A chain of similes for the carnage. The great elephants topple like falling mountains; the horses drop as the warriors' red-haired heads drop; the strong banners fall like bows cut through at the base; and the masses of white tusks and fangs fall like slivers of the crescent moon.