கம்பராமாயணம் 9436 · யுத்த 30.85
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
செல்லினைப் பழித்த வாளி சிந்த - மேகத்தைப் பழித்தது போல இராமபிரான் அம்புகளைப் பொழிந்திட; விழித்த கண்கள் - அரக்கரின் திறந்த கண்களும், கைகளும்; விற்கள், வேல்கள், வாள்கள் - வில், வேல், வாள் முதலியவைகளும்; விண்ணினுள் தெழித்த வாய்கள் - ஆகாயத்தில் பரவும்படி உரப்பிய வாய்களும்; செல்லலுற்ற தாள்கள் - போர்க்களத்தை விட்டுப் போய் நடக்கும் கால்களும்; தோள்கள் - தோள்களும்; நின்று பட்ட அன்றி - நின்ற நின்ற இடங்களிலேயே அழிந்தனவே தவிர: விட்ட கோல் - அரக்கர்கள் இராமனை நோக்கிச் செலுத்திய அம்புகளோ; கழித்த ஆயுதங்கள் - செலுத்திய (மற்றுள்ள ஆயுதங்களோ; ஒன்று செய்தது கண்டதில்லை - இராமபிரானுக்கு ஒரு கெடுதலையும் செய்யக் கண்டதில்லை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Staring eyes, hands, bows, spears, swords, mouths that roared
- up into the sky, feet that had started to run, shoulders, all of them,
- as the arrows that put the clouds to shame poured down, simply perished where they stood; the shafts they shot
- and the weapons they hurled were never seen to do a single thing.
What the poem says
Irāmaṉ's arrows rain down more thickly than any cloud. The demons' glaring eyes, their hands and weapons, their mouths still shouting to the sky, their legs already turning to flee and their shoulders are all destroyed on the spot. Not one of the arrows or weapons they launched at Irāmaṉ is seen to do him any harm.