கம்பராமாயணம் 9437 · யுத்த 30.86

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தொடுத்த வாளியோடு வில் துணிந்து வீழும், முன்; துணிந்து
எடுத்த வாள்கேளாடு தோள்கள் இற்று வீழும்; மற்று உடன்
கடுத்த தாள்கள் கண்டம் ஆகும்; எங்ஙனே, கலந்து நேர்
தடுத்து அ(வ்) வீரர் தாமும் ஒன்று செய்யுமா சலத்தினால்?

பொருள் · Meaning in Tamil

தொடுத்த வாளியோடு வில் துணிந்து முன் விழும் - நாணிலே இணைக்கப்பட்ட அம்போடு விற்கள் கணை விடுபடுமுன் துண்டுபட்டு விழும்; துணிந்து எடுத்த வாள்களோடு தோள்கள் இற்று வீழும் - அரக்க வீரர்கள் துணிவுடன் எடுத்த வாள்களோடு தோள்களும் துண்டுபட்டு விழும்; மற்று - மேலும்; கடுத்த தாள்கள் உடன் கண்டம் ஆகும் - விரைந்து இயங்கும் கால்கள் உடனே துண்டு பட்டு விழும் (இவ்வாறு இராமபிரான் ஏவும் கணைகள் செயல்படுதலால்); வீரர் தாமும் - அரக்க வீரர்கள்; கலந்து நேர் தடுத்து - எதிர்நின்று (இராமபாணங்களை விலக்கி, சலத்தினால் - சினத்தினால்; ஒன்று செய்யுமா எங்ஙனே - ஏதேனும் ஓர் எதிர்ச்செயல் செய்வது எப்படி?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Bows fell cut in two with the arrows still fitted to them, before they could shoot; shoulders
  2. fell severed along with the swords boldly raised; and at once
  3. the swift legs were hacked to pieces; how then could the warriors,
  4. closing and blocking him face to face, do anything in their fury?

What the poem says

So fast are Irāmaṉ's arrows that the demons' bows are cut apart with the arrows still on the string, before they can be loosed. Arms are severed with their raised swords still in hand, and legs are cut off even as they rush forward. However angry the demons are, how can they stand against him and accomplish anything?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1toṭutta vāḷiyōṭu vil tuṇintu vīḻum, muṉ; tuṇintu
eṭutta vāḷkaḷōṭu tōḷkaḷ iṟṟu vīḻum; maṟṟu uṭaṉ
kaṭutta tāḷkaḷ kaṇṭam ākum; eṅṅaṉē, kalantu nēr
taṭuttu vīrartāmum oṉṟu ceyyumā calattiṉāl?