கம்பராமாயணம் 9440 · யுத்த 30.89

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எட்டு வன் திசைக்கண் நின்ற யாவும் வல்ல யாவரும்,
கிட்டின், உய்ந்து போகிலார்கள் என்ன நின்ற, கேள்வியால்;
முட்டும் வெங்கண் மான யானை, அம்பு உராய, முன்னமே
பட்டு உலந்த போல் விழுந்த; என்ன தன்மை பண்ணுமே?

பொருள் · Meaning in Tamil

எட்டு வன் திசைக்கண் நின்ற யாவும் - எட்டுத் திசைகளிலும் காவலுக்கு அமைந்த வலிய யானைகள் எல்லாமும்; வல்ல யாவரும் - அவற்றைப் போல வன்மை மிக்க யாவரும்; கிட்டின் - போரிலே மோதினால்; உய்ந்து போகிலார்கள் என்ன - உயிருடன் பிழைத்துப் போக முடியாதவர்கள் ஆவர் என்று சொல்லும்படி; கேள்வியால் நின்ற - புகழோடு நின்ற அரக்கர் சேனையின் யானைகள்; முட்டும் வெங்கண் மான யானை - பகைவரைத் தாக்கும், கொடிய பார்வை கொண்ட மான உணர்வுடைய (அந்த) யானைகள்; அம்பு உராய - இராமபிரான் செலுத்திய அம்புகள் உராய்ந்த அளவிலேயே; முன்னமே பட்டு வந்த போல் விழுந்த - ஏற்கெனவே இறந்து வந்தவை போல விழுந்தன; என்ன தன்மை பண்ணுமே - இராமனுக்கு எதிராக அவை என்னதான் பண்ண முடியும்!

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Famed for this, that if all the elephants standing in the eight mighty quarters and all who are strong
  2. came near them, they would not escape alive,
  3. the proud elephants with fierce eyes that butt their foes, as the arrows grazed them,
  4. fell as if they had come already dead; what could they do?

What the poem says

The demons' war elephants were renowned as so terrible that not even the eight elephants that guard the quarters of the world, or any other mighty being, could fight them and survive. Yet at the mere graze of Irāmaṉ's arrows they collapse as if they had been dead before they arrived. What could they possibly do against him?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṭṭu vaṉ ticaikkaṇ niṉṟa yāvum valla yāvarum,
kiṭṭiṉ, uyntu pōkilārkaḷ eṉṉa niṉṟa, kēḷviyāl;
muṭṭum veṅ kaṇ māṉa yāṉai, ampu urāya, muṉṉamē
paṭṭu vantapōl viḻunta; eṉṉa taṉmai paṇṇumē?