கம்பராமாயணம் 9445 · யுத்த 30.94

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பிடித்த வாள்கள், வேல்கேளாடு, தோள்கள் பேர் அரா எனத்
துடித்த; யானைமீது இருந்து போர்தொடங்கு சூரர்தம்
மடித்த வாய செந்தலைக் குலம் புரண்ட, வானின் மின்
இடித்த வாயின் இற்ற மாமலைக் குலங்கள் என்னவே.

பொருள் · Meaning in Tamil

பிடித்த வாள்கள் வேல்களோடு - கையில் பிடித்த வாள்களோடும் வேல்களோடும்; பேர் அரா என - பெரிய பாம்புகளைப் போல; தோள்கள் துடித்த - (அரக்க வீரர்களின்) தோள்கள் துடித்தன; யானைமீது இருந்து - யானைகள் மேல் அமர்ந்து; போர் தொடங்கு சூரர்தம் - போர் செய்யத் தொடங்கும் வீரர்களின்; மடித்த வாய்ச் செழுந் தலைக்குலம் - மடித்த வாயோடு கூடிய பெரிய தலைத் தொகுதிகள்; வானின் மின் இடித்த வாயின் - விண்ணிலிருந்து வரும் மின்னல் தாக்கிய இடத்தில்; இற்ற - பிளவுற்ற, மாமலைக் குலங்கள் என்ன - பெரிய மலைக் கூட்டங்கள் போல; புரண்ட - புரண்டன.

போர் முற்றுமளவு வாழார் என்பது தோன்றப் போர் தொடங்கு சூரர் என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Arms still gripping their swords and spears writhed like great serpents;
  2. the massive heads, lips bitten in rage, of the champions
  3. who were only beginning to fight from the backs of elephants rolled about
  4. like ranges of great mountains split where lightning from the sky has struck.

What the poem says

Severed arms, still clutching swords and spears, twitch on the ground like huge snakes. The great heads of the warriors who fought from elephant-back, lips still curled in fury, roll like mountain peaks split by lightning.

The poet calls them warriors who were "beginning" the fight, to show that none of them lived to see it end.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1piṭitta vāḷkaḷ, vēlkaḷōṭu, tōḷkaḷ pēr arā eṉat
tuṭitta; yāṉaimītu iruntu pōr toṭaṅku cūrar tam
maṭitta vāyc ceḻun talaik kulam puraṇṭa, vāṉiṉ miṉ
iṭitta vāyiṉ iṟṟa mā malaik kulaṅkaḷ eṉṉavē.