கம்பராமாயணம் 9449 · யுத்த 30.98
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அழித்து ஒடுங்கு கால மாரி அன்ன - உலகங்களை யெல்லாம் அழித்து ஒடுக்குகின்ற ஊழிக்கால மழைபோல; வாளி ஒளியால் - இராமபிரான் எய்த அம்புகளின் வரிசையால், விழித்து எழுந்து - கண்கள் திறந்தபடியே (விண்ணின்மீது) எழும்பி; வானினூடு மொய்த்த பொய்யர் மெய் எலாம் - ஆகாயவெளியிலே நெருங்கிச் செறிந்த பொய்யர்களாகிய அரக்கர்களின் உடம்புகளெல்லாம் மழைத்த மேகம் வீழ்வ என்ன - மழைநீர் நிரம்பிய மேகங்கள் விழுபவை போலவும்; வாடையின் சுழித்து வந்து - வாடைக் காற்றினால் சுழன்று வந்து; வான மானம் - ஆகாயத்தில் பறக்கும் விமானங்கள்; வீழ்வ என்ன - விழுபவை போலவும்; மண்ணின் மீது துன்னும் - நிலத்தை வந்து அடையும்.
ஆல் - அசை. ஒளி - வரிசை மானம் - விமானம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like rain-laden clouds falling, like sky-chariots
- whirled about by the north wind and falling, they came down thick upon the earth,
- all the bodies of the false ones who, eyes wide open, had risen and swarmed in the sky,
- struck by the ranks of arrows like the rain at the age when all is destroyed and gathered in.
What the poem says
Many demons fought from the sky. Irāmaṉ's arrows pour on them like the deluge at the end of the world, and their bodies, eyes still staring, crash down to earth. They fall like heavy rain clouds dropping from the sky, or like aerial chariots spun round by the north wind and sent plunging down. Here "oḷi" means a row or rank, and "māṉam" a vimāṉam, a flying car.