கம்பராமாயணம் 9450 · யுத்த 30.99
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வயவர் சிலர் தெய்வ நெடும் படைக்கலங்கள் விடுவர் - அரக்க வீரருள் சிலர் தெய்வ வரங்களால் பெற்ற பெரிய போர்க்கருவிகளை ஏவுவர்; சிலர் - அவர்களிலே மற்றும் சிலர்; சிலையில் சுடு கணைகள் கோலி எய்வர் - வில்லில் வெப்பம் உமிழும் அம்புகளைப் பொருத்தி எய்வார்கள்; சிலர் எறிவர் - மேலும் சிலர் கிடைத்த கருவிகளைக் கொண்டு எறிவார்கள்; மலைகள் பலவும் ஏந்தி எற்றுவர் சுற்றுவர் - இன்னும் சில அரக்கர் பல மலைகளைக் கையால் ஏந்தித் தாக்குவர் மேலும் கைக்கொண்ட மலைகளைச் சுழற்றுவர்: சிலர் பெய்வர் - வேறு சிலர் (அந்த மலைகளை பொழிவர்; சிலர் பிடித்தும் எனக் கடுத்து உறுவர் - மற்றுள்ள சில அரக்கர்கள் அப்படிப் பெய்யப்பட்ட மலைகளைப் 'பற்றுவோம்' என விரைவாக மலை வருமிடத்தை அடைவார்கள்; படைக்கலங்கள் பெறாது சிலர் வாயால் வைவர் - எவ்வித போர்க் கருவிகளும் பெறாத சிலர் வாயால் திட்டுவார்கள்; சிலர் தெழிப்பர் - மேலும் சிலர் அதட்டுவார்கள்; வருவர் சிலர் திரிவர் சிலர் - மற்றும் சிலர் புதிதாகப் போர்க்களத்துள் வருவர்; படைக்கலம் பெற்றிடாத வேறு சிலர் போர்க்களத்தில் இங்குமங்குமாகத் திரிவார்கள்.
மன், ஓ: அசைகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Some loosed great divine weapons; some fitted burning arrows to their bows
- and shot; some hurled things; some, lifting many mountains, struck and whirled them
- and rained them down; some rushed up crying 'Let us seize him!'; some, with no weapons left, cursed
- with their mouths; some bellowed; some came on; some roamed about: so were the warriors.
What the poem says
The demons fight back in every way they can. Some launch divine weapons won through boons, some shoot burning arrows, some throw whatever comes to hand. Some heave up mountains, swing them round and hurl them; some rush in shouting that they will capture him.
Those who have lost their weapons can only curse and shout; some newcomers keep arriving, and others simply wander about the field. The closing particles are metrical fillers.