கம்பராமாயணம் 9451 · யுத்த 30.100

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கணிப்பு இலாதார் - கணக்கிட முடியாதவராகிய; பகலோனைப் பற்றிச் சுற்றும் கார்ப்பருவ மேகம் என - சூரியனைச் சூழ்ந்து சுழலும் கார்கால மேகம் போல; வேக நெடும் படை அரக்கர் - வேகமாகச் செல்லக் கூடிய படையிலுள்ள அரக்கர்களில்; பலர் ஆர்ப்பர் - பலர் போர் முழக்கம் செய்வார்கள்; பலர் அடர்ப்பர் - பகைஞரை நெருங்கிப் போர் செய்வார்கள்; பலர் அடுத்தடுத்தே படைக்கலங்கள் அள்ளி அள்ளி - மற்றும் பலர் போர்க்கருவிகளைத் தொடர்ந்து எடுத்து; தூர்ப்பர் - நிரப்புவார்கள்; பலர் மூவிலை வேல் துரப்பர் - பலர் திரிசூலத்தைச் செலுத்துவார்கள்; பலர் கரப்பர் - பலர் ஒளிந்து கொள்வார்கள்; பலர் சுடுதீத் தோன்றப் பார்ப்பர் - பலர் தன் கண்களிலே சுடும் நெருப்புப் புலப்படும்படியாகப் பார்ப்பார்கள்; பலர் நெடுவரையைப் பறிப்பர் - பலர் பெரிய மலைகளைப் பெயர்த்து எடுப்பார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Many roared; many pressed in; many, scooping up weapons again and again,
  2. heaped them on him; many hurled three-pointed spears; many hid; many glared
  3. so that burning fire showed in their eyes; many tore up tall mountains:
  4. the countless demons of that swift, vast army, like rain-season clouds that gather and swirl round the sun.

What the poem says

The countless demons swarm around Irāmaṉ like monsoon clouds closing round the sun. Many roar their battle cries, many close in, many pile weapons upon him one after another, many throw tridents. Many hide, many glare with fire in their eyes, and many tear up great mountains to throw.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ārppar palar; aṭarppar palar; aṭuttu aṭuttē paṭaik kalaṅkaḷ aḷḷi aḷḷit
tūrppar palar; mūvilaivēl turappar palar; karappar palar; cuṭu tīt tōṉṟap
pārppar palar; neṭu varaiyaip paṟippar palar; pakalōṉaip paṟṟic cuṟṟum
kārp paruva mēkam eṉa, vēka neṭum paṭai arakkar kaṇippu ilātār.