கம்பராமாயணம் 9452 · யுத்த 30.101

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எறிந்தனவும், எய்தனவும், எடுத்தனவும், பிடித்தனவும் படைகள் எல்லாம் - வீசி எறியப்பட்டவை, எய்யப் பெற்றவை, கைகளில் பிடிக்கப்பட்டவை ஆகிய பல்வேறு போர்க்கருவிகளெல்லாம்; வெங்கணைகள் பட முறிந்தன - இராமபிரானின் கொடிய அம்புகள் தாக்கியதால் ஒடிந்தொழிந்தன; சுற்றின தேரும் - சுழன்று சூழ்ந்த தேர்களும்; மூரி மாவும் - வலிய யானைகளும், குதிரைகளும்; முற்றின - வாழ்வின் முடிவைப் பெற்றன; நெறிந்தன குஞ்சிகளோடும் நெடுந்தலைகள் உருண்டன - செறிந்து வளர்ந்தனவாகிய தலைமுடிகளோடு (அரக்க வீரரின்) பெரிய தலைகள் உருண்டன; பேர் இருளின் நீங்கிப் பிறிந்தனன் வெய்யவன் என்ன - செறிவுற்ற இருளைவிட்டு நீங்கிப் பிற சூரியனைப் போல; மீது உயர்ந்த தடம் பெரிய தோளான் - மிக உயர்ந்தனவும் அகன்றனவும் ஆகிய பெரிய தோள்களை உடைய இராமபிரான்; பெயர்ந்தனன் - அரக்கர் கூட்டத்திலிருந்து வெளியேறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All the weapons, those hurled, those shot, those lifted and those gripped,
  2. broke as the fierce arrows struck; the chariots that circled round and the mighty beasts came to their end;
  3. great heads rolled with their thick, curling locks; and like the sun
  4. breaking free from deep darkness, he of the lofty, broad, great shoulders came forth.

What the poem says

Every weapon the demons throw, shoot, raise or hold is shattered by Irāmaṉ's arrows. The encircling chariots and the great beasts are destroyed, and heads with thick curled hair roll on the ground.

Irāmaṉ, broad-shouldered and towering, breaks out of the dense mass of demons that had swallowed him, like the sun emerging from thick darkness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṟintaṉavum, eytaṉavum, eṭuttaṉavum, piṭittaṉavum, paṭaikaḷ ellām
muṟintaṉa, veṅ kaṇaikaḷ paṭa; muṟṟiṉa, cuṟṟiṉa tērum, mūri māvum;
neṟintaṉa kuñcikaḷōṭum neṭun talaikaḷ uruṇṭaṉa; pēr iruḷiṉ nīṅki,
piṟintaṉaṉ veyyavaṉ eṉṉap peyarntaṉaṉ mītu uyarnta taṭam periya tōḷāṉ.