கம்பராமாயணம் 9453 · யுத்த 30.102
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
செய்ய மள்ளர் - வயல்களில் இறங்கும் உழவர்கள்; கமலத்தோடு நெல் அறுக்கும் - தாமரையோடு நெற்பயிரை அறுவடை செய்கின்ற, திருநாடன் - தெய்வத்தன்மை பொருந்திய (கோசல) நாட்டவனாகிய இராமபிரான் ஏவிய; நெடுஞ் சரம் - நெடிய அம்புகள்; சொல் அறுக்கும் வலி அரக்கர் - சொல்லின் எல்லைக்கு முடிவு கட்டும் வலிமையுடைய அரக்கர்கள்; தொடும் கவசம் - கட்டியுள்ள கவசங்களை; துகள் படுக்கும் - தூளாக்கும்; யாக்கை துணிக்கும் - உடல்களைத் துண்டாக்கும்; வில் அறுக்கும் - விற்களை அறுத்திடும்; தலை அறுக்கும் - தலைகளை அறுக்கும்; மிடல் அறுக்கும் - வலிமையை அழிக்கும், அடல் அறுக்கும் - (அரக்கர்களின் கொல்லுதல் தொழிலை அழிக்கும்; மேல் மேல் வீசும் கல் அறுக்கும் - தொடர்ந்து (அரக்கரால்) வீசப்படுகின்ற பெருங்கற்களை நொறுக்கும்; மரம் அறுக்கும் - (தாக்குதற்கு அரக்கர் ஏந்தும்) மரங்களை அறுக்கும்; கை அறுக்கும் - அவற்றை ஏந்தியுள்ள கைகளைத் துணிக்கும்; என்றால் - இப்படி இராமன் கணை செயல்பட்டது என்றால்; எவர்க்கும் நிற்கலாமோ - எவரேனும் (இராமனை) எதிர்த்து நிற்க முடியுமா? (முடியாது)
சொல் - சொல்லுதல், புகழ், அரக்கர் புகழ் சொல்லி மாளாது என்பது கருத்து. அடல் - வெற்றி எனினும் ஆம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They grind to dust the armour worn by the demons whose might is beyond words; they cut through bodies;
- they cut bows; they cut heads; they cut strength; they cut prowess; they cut the stones
- hurled again and again; they cut trees; they cut hands: when such are the long arrows of the lord of the blessed land
- where the field workers cut the lotus along with the rice, could anyone stand?
What the poem says
The verse plays on the verb "aṟu", to cut. Irāmaṉ's arrows cut through armour, bodies, bows, heads, strength and prowess, and the stones, trees and arms the demons raise.
Irāmaṉ comes from the blessed Kōcalam country, where the field hands are said to reap lotuses along with the rice, so rich is the land. The arrows of such a lord "harvest" the demons just as easily. "Beyond words" means the demons' fame could never be fully told; "aṭal" may also mean victory.