கம்பராமாயணம் 9454 · யுத்த 30.103

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1'
பாட வேறுபாடு · Project Madurai reads
1' கால் இழந்தும், வால் இழந்தும், கை இழந்தும், கழுத்து இழந்தும், பருமக் கட்டின்
மேல் இழந்தும், மருப்பு இழந்தும் விழுந்தன, என்குநர் அல்லால், வேலை அன்ன
மால் இழந்து, மழை அனைய மதம் இழந்து, வலி இழந்து, மலைபோல் வந்த
தோல் இழந்த தொழில் ஒன்றும் சொல்லினார் இல்லை நெடுஞ் சுரர்கள் எல்லாம்.

பொருள் · Meaning in Tamil

நெடுஞ் சுரர்களெல்லாம் - தரத்தால் பெருமையுடைய தேவர்கள் யாவரும், கால் இழந்தும் வால் இழந்தும் கை இழந்தும் கழுத்து இழந்தும் - கால், வால், தும்பிக்கை, கழுத்து ஆகியவற்றை இழந்தும்; பருமக் கட்டின் மேல் இழந்தும் - மேல் இருந்த அம்பாரியை இழந்தும்; மருப்பு இழந்தும் விழுந்தன - தந்தங்களை இழந்தும் இறந்து விழுந்தன; என்குநர் அல்லால் - என்று பேசினார்களே தவிர; மலை போல் வந்த தோல் - மலைகளைப் போன்ற வடிவுகொண்ட யானைகள்; மால் இழந்து - கோபம் அழிந்து; மழை அனைய மதம் இழந்து - மழைபோல் சொரியும் மதநீர் ஒழுகுதலை இழந்து; இழந்த தொழில் ஒன்றும் சொல்லினர்கள் இல்லை - இழந்துவிட்ட செயல் எதையும் சொல்லவில்லை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "They fell, losing legs, losing tails, losing trunks, losing necks, losing what was on top
  2. of their girths, losing tusks," so they said; but of how they lost
  3. their sea-like frenzy, lost their rain-like must, lost their strength, the elephants that had come on like mountains,
  4. none of the great gods said a single word.

What the poem says

The watching gods describe the elephants falling: they lose their legs, tails, trunks and necks, the howdahs on their backs and their tusks.

But the gods say nothing about how the elephants lost their sea-vast rage, their streaming must and their strength. That happened at once, unseen, before any arrow struck; the terror of Irāmaṉ had already undone them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1' kāl iḻantum, vāl iḻantum, kai iḻantum, kaḻuttu iḻantum, parumak kaṭṭiṉ
mēl iḻantum, maruppu iḻantum viḻuntaṉa, eṉkunar allāl, vēlai aṉṉa
māl iḻantu, maḻai aṉaiya matam iḻantu, vali iḻantu, malaipōl vanta
tōl iḻanta toḻil oṉṟum colliṉarkaḷ illai neṭuñ curarkaḷ ellām.