கம்பராமாயணம் 9455 · யுத்த 30.104

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வேல் செல்வன சத கோடிகள்; விண்மேல் நிமிர் விசிகக்
கோல் செல்வன சதகோடிகள்; கொலை செய்வன மலைய,
தோல் செல்லன சதகோடிகள் : துரகம் தொடர் இரதக்
கால் செல்வன சதகோடிகள்; ஒருவன், அவை கடிவான்.

பொருள் · Meaning in Tamil

(அரக்கர் ஏவி, இராமன் மேல்) செல்வன சத கோடிகள் வேல் - செலுத்தப்படுகின்றவை நூறு கோடி வேல்களாகும்; விண் மேல் நிமிர் விசிகக் கோல் சத கோடிகள் செல்வன - வானம் நோக்கி உயரப் பாய்ந்த அம்புக்கோல்கள் நூறு கோடியாகும், கொலை செய்வன மலைபோல் செல்வன - கொலை செய்கின்றவை யாவும் மலை போன்றனவாயும் செல்லுகின்றனவாகிய; தோல் சதகோடிகள் - யானைகள் நூறு கோடியாகும்; துரகம் தொடர் - குதிரைகள் பூட்டப் பெற்று; கால் செல்வன இரதம் சதகோடி - சக்கரங்களால் இயங்கும் தேர்கள் நூறு கோடியாகும்; அவை கடிவான் ஒருவன் - மேலே குறித்த நூறு கோடிகள் கணக்காயினவற்றை ஒழிப்பவன் (இராமன் ஒருவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The spears that came were a hundred crores; the arrow shafts
  2. that soared into the sky were a hundred crores; the killing elephants that came on like mountains
  3. were a hundred crores; the chariots drawn by horses that ran on wheels
  4. were a hundred crores; and one man cut them all away.

What the poem says

A new metre begins. The demons send against Irāmaṉ a hundred crores of spears, a hundred crores of arrows climbing the sky, a hundred crores of mountain-like killer elephants and a hundred crores of horse-drawn chariots. One man alone destroys them all.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vēl celvaṉa cata kōṭikaḷ; viṇmēl nimir vicikak
kōl celvaṉa cata kōṭikaḷ; kolai ceyvaṉa malaipōl,
tōl celvaṉa cata kōṭikaḷ: turakam toṭar iratak
kāl celvaṉa cata kōṭikaḷ; oruvaṉ, avai kaṭivāṉ.