கம்பராமாயணம் 9457 · யுத்த 30.106

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 '
பாட வேறுபாடு · Project Madurai reads
1'நூறாயிர மதயானையின் வலியோர் ' என நுவல்வோர்,
மாறு ஆயினர், ஒரு கோல் பட, மலைபோல உடல் மறிவார்;
ஆறு ஆயிரம் உள ஆகுவ அழி செம்புனல்; அவைபுக்கு
ஏறாது எறிகடல் பாய்வன, சின மால் கரி இனமால்.

பொருள் · Meaning in Tamil

நூறாயிரம் மத யானையின் வலியோர் - லட்சம் மத யானைகளின் வலிமை கொண்டவர்கள்; என நுவல்வோர் - என்று (சிறப்பித்துச் சொல்லப்படுவோராகிய அரக்கர்கள்; ஒரு கோல் பட - (இராமபிரான் ஏவிய) ஓர்அம்பு பட்டவுடன்; மாறு ஆயினர் - தம் வீரம் மாறுபட்டவராய்; மலை போல உடல் மறிவார் - மலை போன்ற உடல்கள் மடங்கப் பெற்றனர்; ஆயிரம் ஆறு உள ஆகுவ - (மேலும்) ஆயிரம் (குருதி) ஆறுகள் உண்டாயினவாக; வழி செம்புனல் அவை புக்கு - களத்தில் வழிந்த இரத்தம் ஆகிய ஆறுகளிலே கலந்து; சின மால் கரி இனம் - சினமும் மதமும் கொண்ட யானைக் கூட்டங்கள்; ஏறாது - (அந்தக் குருதியாற்றின் கரை ஏறமுடியாமல்; எறி கடல் பாய்வன - அலைகள் மோதும் கடலிலே போய்க் கலந்தன.

ஆல் - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those spoken of as having the strength of a hundred thousand must elephants
  2. were undone when a single shaft struck, and toppled with bodies like mountains;
  3. the flowing red stream became six thousand rivers; and into them
  4. went the herds of furious great elephants, unable to climb out, and were swept into the surging sea.

What the poem says

Demons said to have the strength of a hundred thousand elephants in must collapse like mountains at a single arrow. The blood running from the slain forms thousands of rivers. The raging war elephants are caught in them and, unable to climb the banks, are carried out into the ocean. The commentary takes the number as "a thousand rivers".

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nūṟāyira mata yāṉaiyiṉ valiyōr ' eṉa nuvalvōr,
māṟu āyiṉar, oru kōl paṭa, malai pōla uṭal maṟivār;
āṟu āyiram uḷavākutal aḻi cem puṉal; avai pukku
ēṟātu eṟi kaṭal pāyvaṉa, ciṉa māl kari iṉamāl.