கம்பராமாயணம் 9458 · யுத்த 30.107

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மழு அற்று உகும்; மலை அற்று உகும்; வளை அற்று உகும்; வயிரத்து
எழு அற்று உகும;் இலை அற்று உகும்; அயில் அற்று உகும்; எறிவேல்
பழு அற்று உகும்; மத வெங் கரி; பரி அற்று உகும்; இரதக்
குழு அற்று உகும்; ஒரு வெங்கணை தொடை பெற்றது ஓர் குறியால்.

பொருள் · Meaning in Tamil

ஒரு வெங்கணை - (இராமன் ஏவிய) ஒப்பற்ற ஒரு கொடிய அம்பு; தொடை பெற்றது ஓர் குறியால் - தொடுக்கப்பட்டதாகிய ஓர் இலக்கினால்; மழு அற்று உகும் - மழுக்கள் சிந்தி விழும்; மலை அற்று உகும் - அரக்கரால் எறியப்பட்ட மலைகள் சிதறி விழும்; அற்று உகும் வளை - சிந்தி விழும் வளை என்னும் கருவிகள்; அற்று உகும் வயிரத்து எழு - வயிரம் போல் உறுதி வாய்ந்த எழு என்னும் கருவிகள் உடைந்துவிழும்; அற்று உகும் அயில் - வேல்கள் உடைந்துவிடும்; எழுவேல் - ஓங்கி எழுகின்ற வேல்களின்; இலை அற்று உகும் - (கூரிய) இலை போன்ற பகுதி சிதைந்துவிழும்; மத வெங்கரி - மத நீர் பொழியும் கொடிய யானைகள்; பழு அற்று உகும் - விலா எலும்பு முறிந்து விழும்; பரி - குதிரைகள்; அற்று உகும் -; இரதக் குழு - தேர்களின் கூட்டம்; அற்று உகும் -,

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Axes fell cut apart; mountains fell cut apart; discs fell cut apart; diamond-hard
  2. iron bars fell cut apart; lances fell cut apart; the blades of upraised spears fell cut apart;
  3. the fierce must elephants fell with ribs broken; the horses fell cut apart; the companies
  4. of chariots fell cut apart, all through the one aim given to a single fierce arrow.

What the poem says

The refrain "aṟṟu ukum", "fell cut apart", drives this verse. Every target of a single arrow from Irāmaṉ is shattered: axes, the mountains the demons throw, discus-like weapons called vaḷai, iron clubs (eḻu) as hard as diamond, lances, spearheads, the ribs of the war elephants, horses and whole squadrons of chariots.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maḻu aṟṟu ukum; malai aṟṟu ukum; vaḷai aṟṟu ukum; vayirattu
eḻu aṟṟu ukum; ayil aṟṟu ukum; ilai aṟṟu ukum; eḻu vēl
paḻu aṟṟu ukum; mata veṅ kari; pari aṟṟu ukum; iratak
kuḻu aṟṟu ukum; oru veṅ kaṇai toṭai peṟṟatu ōr kuṟiyāl.