கம்பராமாயணம் 9459 · யுத்த 30.108
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஒரு காலையின் - ஒரே நேரத்தில்; உலகத்து உறும் உயிர் யாவையும் உண்ண - உலகில் வாழும் எல்லா உயிர்களையும் கவர்வதற்கு; வரு காலனும் - வருகின்ற இயமனும், அவன் தூதரும் - இயம தூதர்களும்; நமன் தானும் - நமன் என்பவனும்; அவ் வரைப்பின் - அப்போர்க்களத்தில்; இரு கால் உடையவர் - இரண்டு கால்கள் மட்டுமே உடையவராய்; யாவரும் திரிந்தார் - அவர்கள் எல்லாரும் திரிகின்றவர்களாக; இளைத்திருந்தார் - தளர்ச்சி அடைந்தார்கள்; அருகு ஆயிரம் உயிர் கொண்டு - பக்கத்தே ஆயிரக் கணக்கான உயிர்களைக் கவர்ந்துகொண்டு; தம் ஆறு ஏகலர் - தமக்குரிய வழியில் போகாமல்; அயர்த்தார் - உயிர் கவர்தலாகிய தம் தொழிலை மறந்தார்கள்.
இயமன், நமன் இரண்டு சொற்களும் கூற்றுவனையே குறிப்பதாகக் கொள்ளும் பொதுக் கருத்தைக் கம்பர் இப்பாடலில் ஏற்கவில்லை. வை.மு.கோ.; பதிப்பு, ஐயரவர்கள் நூலகப் பதிப்பு இரண்டும் நமன் என்பான் இயமனின் பிரதானி எனக் குறிக்கும். 'நமன் என்பது யமனைக் காட்ட, காலன் என்பது அவ் யமனுடைய மந்திரியைக் காட்டும் எனவும் வை.மு.கோ. குறித்துள்ளார். திருநாவுக்கரசர் தேவாரத்தையும் (4, 49, 2) பரிபாடல் (3-8) அடிகளுக்குப் பரிமேலழகர் தந்த விளக்கத்தையும் எடுத்துக்காட்டி, தருமன் - யமன், மடங்கல் அவன் ஏவல் செய்யும் கூற்றம்' என அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பதிப்பு விளக்கம் தருகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Kālaṉ, who comes to devour at one stroke all the lives there are in the world,
- his messengers, and Namaṉ himself, all of them, having only two legs each,
- ran about that field until they were worn out; with a thousand lives at their side
- they could not go on their way, and forgot their task.
What the poem says
So many demons are dying at once that the powers of death cannot keep up. Kālaṉ, his messengers and Namaṉ, having only two legs apiece, run back and forth across the field until they are exhausted. With thousands of souls piling up beside them, they cannot even set off on their road and lose track of their work.
The commentary notes that Kampaṉ here treats Kālaṉ and Namaṉ as two separate figures, Death and his minister, and cites differing views of earlier editors and commentators on which is which.