கம்பராமாயணம் 9460 · யுத்த 30.109

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அடுக்கு உற்றன, மதயானையும், அழிதேர்களும், பரியும்
தொடுக்குற்றன விசும்பு ஊடு உறச் சுமந்து ஓங்கின எனினும்,
மிடுக்குற்றன கவந்தம் குலம் எழுந்து ஆடலின் எல்லாம்
நடுக்குற்றன, பிணக் குன்றுகள், உயிர் நண்ணின என்ன.

பொருள் · Meaning in Tamil

அடுக்குற்றன (அழி) மத யானையும் - அடுக்கடுக்காக, வந்து அழிந்த மத யானைகளும்; அழி தேர்களும் - அழிந்த தேர்களும்; பரியும் - அழிந்த குதிரைகளும்; தொடுக்குற்றன - ஒன்றொடொன்று தொடர்புடையனவாய்; விசும்பு ஊடுற - ஆகாயத்தினூடு சென்று; சுமந்து ஓங்கின - மிக உயரமாய்க் குவிந்து விட்டன; எனினும் - இப்படிப் பிணங்களாய்க் குவிந்துவிட்டாலும்; மிடுக்குற்றன கவந்த குலம் - வலிமையான உடல்வாகு கொண்ட கவந்தங்களின் கூட்டம்; எழுந்து ஆடலின் - குதித்தெழுந்து ஆடுவதால்; பிணக்குன்றுகள் எல்லாம் - பிண மலைகளெல்லாம்; உயிர் நண்ணின என்ன - மீண்டும் உயிர் பெற்றுவிட்டதைப் போல், நடுக்குற்றன - அதிர்ந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The must elephants piled layer on layer, the wrecked chariots and the horses,
  2. heaped one upon another, rose up into the sky;
  3. yet as the mighty hosts of headless trunks rose and danced, all
  4. those mountains of corpses shook, as if life had come back to them.

What the poem says

The dead elephants, broken chariots and horses lie in heaps so high they reach into the sky. But headless trunks (kavantam), still full of fierce energy, leap up and dance on top of them, as headless bodies were believed to do on a battlefield of great slaughter. The mountains of corpses shake and quiver as though they had come back to life.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṭukkuṟṟaṉa, mata yāṉaiyum, aḻi tērkaḷum, pariyum
toṭukkuṟṟaṉa vicumpūṭu uṟac cumantu ōṅkiṉa eṉiṉum,
miṭukkuṟṟaṉa kavantak kulam eḻuntu āṭaliṉ ellām
naṭukkuṟṟaṉa, piṇak kuṉṟukaḷ, uyir naṇṇiṉa eṉṉa.