கம்பராமாயணம் 9461 · யுத்த 30.110
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பட்டார் உடல் படு செம்புனல் - இறந்துவிட்ட அரக்கர்களின் உடலிலே தோன்றிய குருதி; திருமேனியில் படலால் - தெய்வீக உடம்பிலே பட்டதால்; கட்டு ஆர்சிலைக் கருஞாயிறு புரைவான் - உறுதி பெறக் கட்டப்பட்ட வில்லாளியும் கரிய சூரியனைப் போல்வானுமாகிய இராமபிரான்; யுகக் கடை நாள் - ஊழிக் காலத்தின் கடைசி நாளில்; சுட்டு - எரித்து; ஆசு அறுத்து - பற்றுக் கோடானவற்றை அழித்து; உலகு உண்ணும் - உலகங்களை உண்ணுகின்ற; சுடரோன் எனப் பொலிந்தான் - சூரியனைப் போல அழகுற விளங்கினான்; ஒட்டார் உடல் குருதி குளித்து எழுந்தானையும் ஒத்தான் - பகைவர்களின் குருதியிலே மூழ்கி எழுந்த பரசுராமனைப் போலவும் இருந்தான்.
குருதி குளித்து எனற்பாலது ஓசை நியதிக்காகக் குருதிக் குளித்து என நின்றது. கருநிறம் ஆயினும் ஒளி மேனியன் ஆதலின் கரு ஞாயிறு என இல்பொருள் உவமை கூறினார்
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the red stream from the bodies of the slain splashed his holy form,
- he who is like a dark sun, with his close-bound bow, shone like that sun
- which on the last day of the age burns, cuts away all support and devours the world;
- and he was like the one too who rose after bathing in the blood of his enemies.
What the poem says
Irāmaṉ's body is spattered red with the demons' blood. Dark-skinned yet radiant, he is a "dark sun", an impossible comparison the poet uses deliberately. Now, reddened, he looks like the sun that blazes at the end of an age and burns the whole world away.
He also resembles Paracurāmaṉ (Paraśurāma), who is said to have bathed in the blood of the warrior kings he slew.