கம்பராமாயணம் 9462 · யுத்த 30.111

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தீ ஒத்தன உரும் ஒத்தன சரம் சிந்திட, சிரம் போய்
மாயம் தமர் மடிகின்றனர் எனவும், மறம் குறையார்,
காயத்திடை உயிர் உண்டிட, உடன்மொய்த்து எழு களியால்
ஈ ஒத்தன நிருதக்குலம்; நறவு ஒத்தனன் இறைவன்.

பொருள் · Meaning in Tamil

தீ ஒத்தன உரும் ஒத்தன - நெருப்பையும் இடியையும் ஒத்தனவாகிய; சரம் சிந்திட - அம்புகளை இராமபிரான் செலுத்தியதால்; சிரம் போய் மாய - தலை அறுபட்டு மாய்தலால்; தமர் மடிகின்றனர் எனவும் - தம்மைச் சார்ந்தவர்கள் இறக்கின்றனர் என்பதை உணர்ந்தும் கூட; மறம் குறையா - தங்கள் வீரத்தில் குறையாமல்; காயத்திடை உயிர் உண்டிட - உடலில் உள்ள உயிரை இராமபாணங்கள் உண்ணும்படியாக; எழு களியால் - பொங்குகின்ற மன எக்களிப்போடு; நிருதக் குலம் - அரக்கர் கூட்டங்கள்; உடன் மொய்த்து - ஒருங்கே மொய்த்து; ஈ ஒத்தன - தேனீக்களைப் போன்று இருந்தன; இறைவன் - தலைவனாகிய இராமன்; நறவு ஒத்தனன் - தேன் அடையினைப் போன்றவன் ஆனான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As he scattered arrows like fire and like thunderbolts, and their kin
  2. perished with heads struck off, still, though they knew it, with valour undiminished,
  3. the demon hosts, swarming round his body in rising elation to have their lives drunk from their bodies,
  4. were like bees; and the Lord was like honey.

What the poem says

Though they see their comrades beheaded by arrows like fire and thunder, the demons do not lose courage. Exultant, they crowd around Irāmaṉ, almost eager to have his arrows take their lives. They are like bees swarming to honey, and Irāmaṉ is the honey; the image hints that death at his hands is itself a blessing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tī ottaṉa urum ottaṉa caram cintiṭa, ciram pōy
māya tamar maṭikiṉṟaṉar eṉavum, maṟam kuṟaiyā
kāyattiṭai uyir uṇṭiṭa, uṭal moyttu eḻu kaḷiyāl
ī ottaṉa nirutak kulam; naṟavu ottaṉaṉ iṟaivaṉ.