கம்பராமாயணம் 9463 · யுத்த 30.112
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மொய்த்தாரை - தன்னை சூழவந்து நெருங்கிய அரக்கர்களை; ஓர் இமைப்பின் தலை - ஒரு நொடி நேரத்தில்; முடுகத் தொடு சிலையால் - விரைவாக அம்பு தொடுக்கும் வில்லினைக் கொண்டு; தைத்தான் - (இராமபிரான்) தைத்தான்; அவர் சரத்தால் - அவ்வாறு அம்புகளால் தைக்கப்பட்ட அரக்கர்கள்; திண் பசுங் கழல்காய் ஒத்தனர் - திண்ணிய பசிய கழற்சிக்காய் போன்று காட்சியளித்தனர்; கைத்தார் நெடுந்தேரும் - வெறுப்புக் கொண்ட பகைவர்களுடைய பெரிய தேர்களையும்; கடுங்களிறும் - விரைவுடைய யானைகளையும், வழுவாச் சரக் குழுவால் - இலக்குத் தப்பாத அம்புக் கூட்டத்தால்; அழி குழம்பாம் வகை - மிகுத்துப் பெருகும் குழம்பாகும் வகையில்; களத்து அழுந்தக் குத்தான் - போர்க்களத்திலே புதையும்படி சிந்தினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those who swarmed round him he pierced in the space of a blink
- with his swift-shooting bow; bristling with arrows, they looked like hard green kaḻaṟcci pods;
- and the tall chariots and fierce elephants of his foes he struck down
- with his unerring flights of arrows till they sank into the field as a crushed paste.
What the poem says
In the blink of an eye Irāmaṉ pierces the demons crowding round him with so many arrows that they bristle like the spiny green pods of the kaḻaṟcci (fever nut) plant. With his unerring arrows he pounds their great chariots and furious elephants into a pulp that sinks into the battlefield.