கம்பராமாயணம் 9465 · யுத்த 30.114

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மணி குண்டலம், வலயம், குழை, மகரம், சுடர் மகுடம்,
அணி கண்டிகை, கவசம், கழல் திலகம் முதல கலம்,
துணிவு உண்டவர் உடல் சிந்தின, தொடர்கின்றன, சுடரும்;
திணி கொண்டலினிடை மின்குலம் மிளிர்கின்றன சிவண.

பொருள் · Meaning in Tamil

திணி கொண்டலினிடை - செறிந்த மேகங்களினிடையே; மின் குலம் மிளிர்கின்றன சிவண - மின்னல் கூட்டங்கள் ஒளி விடுவன போல்; சுடர்கின்றன தொடரும் - ஒளிர்வனவாய்த் தொடர்ந்துள்ள; மணி குண்டலம் - இரத்தின மணி இழைத்த குண்டலங்கள்; வலயம் - தோளில் அணியும் (வாகு) வலயம்; மகரம் குழை - மகரக் குழைகள்; சுடர் மகுடம் - ஒளி வீசும் கிரீடங்கள்; அணி கண்டிகை - அழகிய கண்டிகை; கவசம், கழல், திலகம் முதல - கவசம், வீரக்கழல், வெற்றித் திலகம் முதலாகிய; கலம் - அணிகள்; சிந்தின - சிதைவுற்றன.

அரக்கர் உடல்கள் மேகத்திரள்கள் போலவும், அவர் உடல்களிலிருந்து சிதறி ஒளி வீசும் அணிகலன்கள் மின்னல் திரள் போலவும் காணப்பட்டன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Jewelled earrings, armlets, ear-pendants, makara earrings, shining crowns,
  2. fine neck chains, armour, anklets of valour, forehead marks and the other ornaments
  3. scattered from the bodies of those cut down, and gleamed in long trails,
  4. like flocks of lightning flashing among dense rain clouds.

What the poem says

The ornaments of the slain demons are strewn across the field: jewelled earrings, armlets, fish-shaped makara pendants, gleaming crowns, neck chains, armour, warriors' anklets and forehead marks. The dark bodies of the demons look like massed storm clouds, and the jewels glittering among them like streaks of lightning.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṇi kuṇṭalam, valayam, kuḻai, makaram, cuṭar makuṭam,
aṇi kaṇṭikai, kavacam, kaḻal tilakam mutala akalam,
tuṇiyuṇṭavar uṭal cintiṉa, cuṭarkiṉṟaṉa, toṭarum;
tiṇi koṇṭaliṉiṭai miṉ kulam miḷirkiṉṟaṉa civaṇa.