கம்பராமாயணம் 9467 · யுத்த 30.116

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 '
பாட வேறுபாடு · Project Madurai reads
1நேரினன்; என் நேரினன் ' என்று யாவரும் எண்ண,
பொன் நேர்வரு வரிவில் கரத்து ஒரு கோளரி பொருவான்,
ஓன்னார் பெரும் படைப் போர் கடல் உள் நின்றனன் எனினும்
அல்நேரவர் உடனே திரி நிழலே எனல் ஆனான்.

பொருள் · Meaning in Tamil

பொன் நேர் வரு வரிவில் கரத்து - பொன்னை ஒத்ததாய் கட்டமைந்த வில்லினைக் கையிலே கொண்ட; ஒரு கோளரி பொருவான் - ஒரு சிங்கம் போன்றவனாகிய இராமன்; ஒன்னார் - பகைவர்களுடைய; பெரும் படைப் போர்க்கடல் உள் நின்றுளன் எனினும் - பெரிய போர்ப் படையாகிய கடலுக்கு நடுவிலேயே நின்றானென்றாலும்; 'என் நேரினன்; என் நேரினன்' என்று யாவரும் எண்ண - என் எதிரில் உள்ளான் என்று எல்லோரும் நினைக்கும் படியாக; அல் நேரலர் உடனே - இருட்டினைப் போன்ற பகைவர்களுடனேயே, திரி நிழலே எனல் ஆனான் - திரிகின்ற நிழல் போன்றவனானான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that every one of them thought, "He is facing me; he is facing me,"
  2. he who was like a lion, with a banded bow in his hand, coming on a golden chariot,
  3. though he stood in the midst of the great battle-sea of his enemies' army,
  4. became like a shadow that moves along with each of those dark foes.

What the poem says

Though Irāmaṉ stands in the middle of the ocean of enemy troops, every single demon feels that Irāmaṉ is directly facing him. Lion-like, bow in hand, he seems to follow each of his dark foes as closely as his own shadow. The commentary reads the second line as "with a banded bow like gold".

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nēriṉaṉ; eṉ nēriṉaṉ ' eṉṟu yāvarum eṇṇa,
poṉ tēr varu vari vil karattu oru kōḷari poruvāṉ,
oṉṉār perum paṭaip pōrk kaṭal uḷ niṉṟu uḷaṉ eṉiṉum
al nēralar uṭaṉē tiri niḻalē eṉal āṉāṉ.