கம்பராமாயணம் 9470 · யுத்த 30.119

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சண்டக் கடு நெடுங் காற்று இடை துணிந்து எற்றிட, தரைமேல்
கண்டப் படு மலைபோல், நெடு மரம்போல், கடுந் தொழிலோர்
துண்டம் பட, கடுஞ் சாரிகை திரிந்தான், சரம் சொரிந்தான்
அண்டத்தினை அளந்தான் எனக் கிளர்ந்தான், நிமிர்ந்து அகன்றான்.

பொருள் · Meaning in Tamil

அண்டத்தினை அளந்தான் என - எல்லா அண்டங்களையும் அளந்த விக்கிரமாவதாரப் பரமன் என்று சொல்லும்படியாக; கிளர்ந்தான் - எழுச்சி பெற்றவனாகிய இராமபிரான்; நிமிர்ந்து அகன்றான் - நிமிர்ந்து போர்க்களத்தின் பல பக்கங்களையும் அடைந்தவனாய், கடுந்தொழிலோர் - கொடுஞ் செயல் உடையவர்களாகிய அரக்கர்கள்; கடு நெடுஞ் சண்டக் காற்று - விரைவுடன் வீசுகின்ற நெடிய சண்ட மாருதக் காற்றானது; இடை - நடுவே புகுந்து; துணிந்து எற்றிட - பிளந்து மோதுதலால்; தரை மேல் - மண்ணின் மீது; கண்டப்படு மலைபோல் - துண்டாகி விழும் மலை போலவும்; நெடு மரம் போல் - பெரிய மரங்களைப் போலவும்; துண்டப்பட - துண்டு துண்டாகும்படி; கடுஞ் சாரிகை திரிந்தான் - விரைவாகச் சாரிகையிட்டான்; சரம் சொரிந்தான் - (சாரிகை திரிந்த வேகத்துடனேயே) அம்புகளைப் பொழிந்தான். சண்டம் - வேகம், வெப்பம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that those of cruel deeds were cut to pieces like mountains
  2. broken on the ground and like tall trees, when a fierce, long, raging wind
  3. tears in among them and strikes, he wheeled in swift circles and poured out arrows;
  4. he rose up as though he were the one who measured the universe, and towered and spread wide.

What the poem says

Irāmaṉ seems to grow and fill the battlefield, like Viṣṇu in his Trivikrama form, who expanded to measure the whole universe in three strides. As he wheels and shoots, the demons are hacked to pieces like mountains and great trees smashed by a violent storm wind. "Caṇṭam" means fierce speed or heat.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1caṇṭak kaṭu neṭuṅ kāṟṟiṭai tuṇintu eṟṟiṭa, taraimēl
kaṇṭap paṭu malaipōl, neṭu marampōl, kaṭun toḻilōr
tuṇṭap paṭa, kaṭuñ cārikai tirintāṉ, caram corintāṉ
aṇṭattiṉai aḷantāṉ eṉak kiḷarntāṉ, nimirntu akaṉṟāṉ.