கம்பராமாயணம் 9471 · யுத்த 30.120
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
களி யானையும் - மதங்கொண்டிருந்த யானைகளும்; நெடுந் தேர்களும் கடும் பாய் பரிக் கணமும் - உயரமான தேர்களும் விரைவுடன் பாய்ந்து ஓடுகின்ற குதிரைக் கூட்டமும்; தெளி யாளியும் - தாக்கும் முறையில் தெளிவு கொண்ட யாளிகளும்; முரட்சீயமும் - முரண் படுகின்ற சிங்கங்களும்; சின வீரர் தம் திறமும் - கோபங்கொண்ட வீரர்களின் பகுதியும், வானகம் வெளி இலதாம் வகை - வானத்திலே இடைவெளியே இல்லாத வகையில்; விழுந்து ஓங்கிய - செத்து விழுந்து உயர்ந்த; பிணப்பேர் நளிர் மா மலை பல - பிணங்களென்ற பேர் கொண்ட குளிர்ந்த பெரிய மலைகள் பலவற்றை; கடல் கிடந்தான் - திருப்பாற் கடலில் பள்ளி கொண்டிருந்தவனாகிய இராமன்; தாவினன் நடந்தான் - தாண்டி நடந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The frenzied elephants, the tall chariots, the throngs of fierce, leaping horses,
- the sure-striking yāḷis, the savage lions and the companies of furious warriors
- fell and rose in heaps till no open sky was left; and over the many great, cold mountains called corpses
- he who lies upon the ocean leapt and strode.
What the poem says
The corpses of elephants, chariots, horses, yāḷis, lions and warriors rise in heaps until they blot out the open sky. Irāmaṉ, who as Viṣṇu reclines on the Ocean of Milk, strides and leaps over these cold mountains of the dead as he fights on.