கம்பராமாயணம் 9477 · யுத்த 30.126
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
குவிந்தன - குவிந்தனவாகிய; வென்றி வீரர் எயிறும் - வெற்றி (தேடிய) அரக்க வீரரின் பற்களும்; மதம் விடாக் குன்றின் வெள்ளை மருப்பும் - மத நீர் ஒழுகுதல் நீங்காத குன்றுகளாகிய யானைகளின் வெள்ளைத் தந்தங்களும்; என்றும் என்றும் அமைந்த இளம்பிறை - ஒவ்வொரு நாளும் தோன்றுகின்ற இளம்பிறைகள்; ஒன்றி - பலவும் ஒன்றாக; உக்கவும் ஒத்த - சிதறியவை போன்றன.
ஆல் - அசை. அரக்க வீரரின் கோரைப் பற்களும் யானைகளின் தந்தங்களும் மிகப் பல. அவற்றுக்கு நேரான பிறைகளும் பலவாதல் வேண்டுமென்பதால் ஒவ்வொரு நாளும் தோன்றும் பிறைகளாகக் குறித்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The fangs of the victorious warriors and the white tusks
- of the mountain-like elephants that never cease their must lay heaped up,
- like all the young crescent moons of every day there has ever been
- gathered together and fallen onto the great earth.
What the poem says
The broken fangs of the demon warriors and the white tusks of their elephants lie in great heaps. They look as if the young crescent moon of every single day had been collected together and dropped on the earth. The commentary notes that the poet needed countless crescents to match the countless fangs and tusks, so he gathered those of every day.