கம்பராமாயணம் 9481 · யுத்த 30.130

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஒல்வதே! இவ் ஒருவன் இவ் யூகத்தைக்
கொல்வதே நின்று! குன்று அன்ன யாம் எலாம்
வெல்வது ஏதும் இலாமையின் வெண் பலை
மெல்வதே! 'என வன்னி விளம்பினான்.

பொருள் · Meaning in Tamil

ஒல்வதே - தனியாக நிற்கும் இந்த ஒருவனுக்கு இத்துணை வலிமை இருக்கமுடியுமா! இவ் ஒருவன் நின்று இவ் யூகத்தைக் கொல்வதே - இந்த ஒருவன் தனியாக நின்று அணி வகுத்துள்ள இந்த வியூகத்தை அழிப்பதா; குன்று என யாம் எலாம் - மலைபோல ஓங்கி நிற்கும் நாமெலாம்; வெல்வது ஏதும் இலாமையின் - வெல்லுவதற்கு யாதொரு வழியும் இல்லாமையால்; வெண் பல்லை மெல்வதே - வெள்ளைப் பல்லை மென்று கொண்டிருப்பதா? என வன்னி விளம்பினான் - என்று வன்னி என்ற அரக்கர் படைத்தலைவன் மொழிந்தான்.

வ்யூகம் - யூகம் என நின்றது. வியூகம் - அணிவகுப்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Is this possible? That this one man should stand and slaughter
  2. this whole battle array! And all of us, like mountains,
  3. having no way to win, should just
  4. grind our white teeth!" So Vaṉṉi spoke.

What the poem says

Vaṉṉi, one of the demon commanders, cries out in fury and disbelief. Can a single man really stand there and destroy their entire battle formation (yūkam, from Sanskrit vyūha), while all of them, huge as mountains, can do nothing but gnash their teeth?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'olvatē! iv oruvaṉ iv yūkattaik
kolvatē niṉṟu! kuṉṟu eṉa yām elām
velvatu ētum ilāmaiyiṉ veṇ palai
melvatē! 'eṉa vaṉṉi viḷampiṉāṉ.