கம்பராமாயணம் 9484 · யுத்த 30.133

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உற்று உருத்து எழு வெள்ளம் உடன்று எழா
சுற்று முற்றும் வளைந்தன தூவின
ஒற்றை மால் வரைமேல் உயர் தாரைகள்
பற்றி மேகம் பொழிந்து என பல் படை.

பொருள் · Meaning in Tamil

உருத்து எழு வெள்ளம் - சினந்த எழுந்த பெருஞ்சேனை வெள்ளம்; உடன்று எழா - மாறுபாடு கொண்டு எழுந்து; உற்று - இராமனை அடைந்து; சுற்றும் முற்றும் - சூழ்ந்து முழுவதாக; வளைந்தன - வளைத்துக்கொண்டு; ஒற்றை மால் வரைமேல் - தனியேயுள்ள ஒரு பெரிய மலைமீது; மேகம் பற்றி உயர்தாரைகள் பொழிந்தன - மேகம் பொழிந்தது போல; பல் படை தூவின - பலவகைப் படைக்கலங்களைத் தூவின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The furious host rose up in hostility, closed in,
  2. surrounded him on every side and showered
  3. their many weapons, as clouds gather on a single great mountain
  4. and pour down tall streams of rain.

What the poem says

Spurred on by Vaṉṉi, the enraged demon host surges forward, rings Irāmaṉ round completely and hurls every kind of weapon at him. It is like massed clouds clinging to a lone mountain and pouring down torrents of rain on it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṟṟu uruttu eḻu veḷḷam uṭaṉṟu eḻā
cuṟṟum muṟṟum vaḷaintaṉa tūviṉa
oṟṟai māl varaimēl uyar tāraikaḷ
paṟṟi mēkam poḻinteṉa pal paṭai.