கம்பராமாயணம் 9488 · யுத்த 30.137

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உப்பு தேனு நெய் ஒண்தயிர் பால் கரும்பு
அப்பு தான் என்று உரைக்கும் அவ் ஆழிகள்
துப்புப் போல் குருதிப் புனல் சுற்றலால்
தப்பிற்று அவ் உரை இன்று ஓர் தனுவினால்.

பொருள் · Meaning in Tamil

உப்பு தேன், மது, ஒண் தயிர், பால், கரும்பு, அப்பு என்று உரைத்தன ஆழிகள் - உப்பு, தேன், கள், ஒள்ளிய தயிர், பால், கருப்பஞ்சாறு, தண்ணீர் என்று உரைக்கப்பட்ட ஏழு கடல்களும்; இன்று - இப்போது; ஓர் தனுவினால் - (இராமனுடைய) ஒப்பற்ற வில்லினால்; துப்பும் போல் - பவழம் போல் உள்ள; குருதிப் புனல் சுற்றலால் - இரத்த நீரால் சூழப்பட்டதால்; அவ் உரை தப்பிற்று - தனித்தனி ஏழு கடல்கள் என்று சொல்லப்பட்ட பழைய பேச்சுத் தவறாகிவிட்டது.

மது என்பதற்குப் பதில் நெய் சேர்த்துச் சொல்வது வேறு பாடம். இப்போது ஏழு கடல்கள் இல்லை. எல்லாம் ஒரே குருதிக் கடலே என்பதாம். தான் - தான் உரை அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Salt, honey, wine, bright curd, milk, sugar-cane juice
  2. and water: so the seas were named;
  3. but now, since coral-red floods of blood surround the world,
  4. that saying has proved false, through a single bow.

What the poem says

Tradition speaks of seven seas encircling the world, made of salt water, honey, wine, curd, milk, cane juice and fresh water (some versions have ghee in place of wine). Now, thanks to Irāmaṉ's single bow, all of them are filled with coral-red blood, and the old saying no longer holds: there is only one sea, a sea of blood.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uppu tēṉ matu oṇ tayir pāl karumpu
apputtāṉ eṉṟu uraittaṉa āḻikaḷ
tuppuppōl kurutip puṉal cuṟṟalāl
tappiṟṟu av urai iṉṟu ōr taṉuviṉāl.