கம்பராமாயணம் 9490 · யுத்த 30.139

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எடுத்தவர், இரைத்தவர், எரிந்தவர், செறிந்தவர், மறம் கொடு எதிரே
தடுத்தவர், சலித்தவர், சரிந்தவர், பிரிந்தவர், தனிக் களிறுபோல்
கடுத்தவர், கலித்தவர், கறுத்தவர், செறுத்தவர், கலந்து, சரம் மேல்
தொடுத்தவர், துணிந்தவர், தொடர்ந்தனர், கிடந்தனர் துரந்த கணையால்.

பொருள் · Meaning in Tamil

எடுத்தவர் - படைக்கலங்களை எடுத்தவரும், இரைத்தவர் - ஆரவாரம் செய்தவர்களும்; எறிந்தவர் - படைக்கலங்களை இராமனை நோக்கி எறிந்தவர்களும்; செறிந்தவர் - ஒருங்கே கூடி வந்தவர்களும்; மறங்கொடு எதிரே தடுத்தவர் - வீரத்தோடு எதிர்த்து வந்த கணைகளைத் தடுத்தவர்களும்; சலித்தவர் - போரை முடிக்க இயலவில்லையே என மனம் சலித்தவர்களும்; சரிந்தவர் - ஆற்ற மாட்டாமல் நிலத்திலே சரிந்தவர்களும்; பிரிந்தவர் - தம் உடன் வந்தோரிடமிருந்து பிரிந்து வந்தவர்களும்; தனிக் களிறு போல் கடுத்தவர் - தனியாக வந்த யானைபோல் விரைந்தவர்களும்; கலித்தவர் - செருக்கியவர்களும்; கறுத்தவர் - சினம் கொண்டவர்களும்; செறுத்தவர் - சீறியவர்களும்; கலந்து - நெருங்கி வந்து; சரம் மேல் தொடுத்தவர் - அம்புகளை (இராமன்) மேல் தொடுத்தவர்களும் (ஆகிய அனைவரும்); துரந்த கணையால் - இராமபிரான் செலுத்திய அம்புகளால்; துணிந்தவர் - வெட்டப்பட்டவராய்; தொடர்ந்தனர் கிடந்தனர் - அணியணியாகக் கிடந்தார்கள். போர்க்களத்திலே போர் செய்வோரின் செயல்களை எத்தனை சொற்களால் கம்பர் குறிக்கிறார் என்பதை மனம் கொள்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those who raised weapons, those who roared, those who hurled, those who massed, those who boldly
  2. blocked him face to face, those who flagged, those who slumped, those who broke away, those who charged
  3. like lone tuskers, those who exulted, those who glowered, those who raged, those who closed in and loosed arrows at him,
  4. all were cut down and lay in rows, by the arrows he sent forth.

What the poem says

A new metre and another rapid catalogue, each word ending in "-tavar" ("those who ..."). Every kind of demon warrior is named: those who seized weapons, shouted, threw, crowded in, stood boldly in his way, wearied, sank down, straggled, charged like rogue elephants, swaggered, glowered, raged, or came close and shot at him. All alike are cut down by Irāmaṉ's arrows and lie in rows on the field. The commentary invites the reader to notice how many words Kampaṉ finds for a warrior's actions.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṭuttavar, iraittavar, eṟintavar, ceṟintavar, maṟaṅkoṭu etirē
taṭuttavar, calittavar, carintavar, pirintavar, taṉik kaḷiṟupōl
kaṭuttavar, kalittavar, kaṟuttavar, ceṟuttavar, kalantu, caram mēl
toṭuttavar, tuṇintavar, toṭarntaṉar, kiṭantaṉar turanta kaṇaiyāl.