கம்பராமாயணம் 9491 · யுத்த 30.140
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தொடுப்பது ஆயிரம் சுடர்ப் பகழி - இராமபிரானால் தொடுத்துச் செலுத்தப்படுகின்ற ஒளிமிக்க அம்புகள் ஆயிரம்; நிரைத்தவை - வரிசையாகத் தொடுக்கப்படுகின்ற அவை; துரந்த துறைபோய்ப் படுப்பது - செலுத்தப்பட்ட இலக்குகளை அடைந்து அழிப்பது; வயப் பகைஞர் ஆயிரரை அன்று - வலிமை மிக்க பகைஞர் ஆயிரம் பேரை அன்று; பதினாயிரவரை - பதினாயிரம் பேரையாகும்; கடுப்பு அது - செலுத்தப்படும் வேகம் அது; கருத்தும் அது - செலுத்திய இராமனுடைய கருத்தும் அதுவே; கட் புலன் மனம் கருதல் கல்வி இல - அம்புகள் வேகமாகச் செல்வதைக் கண்டறிவதற்கு கண்ணுக்கோ விளைவைக் கருதிப் பார்ப்பதற்கு மனத்துக்கோ பயிற்சி இல்லை; வேல் எடுப்பது - அரக்கர்கள் இராமனைத் தாக்குவதற்கு வேற்படையை எடுப்பது; படப் பொருவது அன்றி - தாங்கள் இறப்பதற்கு போர் செய்வதைத் தவிர; இவர் செய்வது ஒரு நன்றி உளதோ - இந்த அரக்கர்கள் செய்து கொள்ளக்கூடிய வேறு நல்ல செயல் உளதோ? (இல்லை).
ஆங்கிலம் · English translationAI
Translation
- What he nocked was a thousand blazing arrows in a row; going where they were sent,
- what they laid low was not a thousand mighty foes but ten thousand;
- such was their speed, such his purpose; neither eye nor mind had the skill to follow; as for the demons
- raising spears, apart from fighting only to die, was there any good thing they could do?
What the poem says
Each time Irāmaṉ draws, he fits a thousand shining arrows in a row, and together they kill not a thousand but ten thousand mighty enemies. Such is their speed and such is his intent that neither the eye nor the mind can keep track. All that is left to the demons when they raise their spears is to fight and die; there is nothing better they can do.