கம்பராமாயணம் 9492 · யுத்த 30.141
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தூசியொடு நெற்றி, இரு கையினொடு பேரணி, கடைக்குழை - தூசிப்படை, நெற்றிப் படை, இரு பக்கங்களில் நிற்கும் கைகோட்படை, பேரணிப் படை, பின்னணிப் படை ஆகிய அத்துணை வகையான படைகளையும்; ஊசி நுழையா வகை தொகுத்து - அந்த அரக்கர் படைநடுவே ஊசிகூட நுழையமுடியாதவாறு ஒரே இடத்தில் கூட்டி வளைத்து; சரத்து அணி வகுக்கும் - அம்புகளை (இராமபிரான் வரிசையாகச் செலுத்தினான்; அவை உயிரை உண்ணும் - அந்த அம்புகள் (ஒரே இடத்தில் கூட்டியதோடு) அரக்கரின் உயிரைப் போக்கிவிடும்; ஆசைகளை உற்று உருவும் - (செறிந்து கூடிய அரக்கரைக் கொன்றதோடு) மேலும் திசைகளை அடைந்து திசைகளை ஊடுருவும்; அதன் இப்புறம் உளார் - அம்புகள் பாய்ந்த திசைகளின் எல்லைகளுக்கு இந்தப் பக்கத்தில் இருந்த அரக்கர்கள்; ஈசன் எதிர் உற்று - இறைவனாகிய இராமன் முன்பு வந்து; உகுவது அல்லால் - தங்கள் உயிரைச் சிந்துவதைத் தவிர; இகல் முற்றுவது ஓர் கொற்றம் எவனோ? - பகையினை முடிப்பதாகிய ஒரு வெற்றி பெறுவது எது?
தூசி - முன்வரிசைப் படை; தார் என்றும் இதனைக் குறிப்பர் நெற்றி என்பதும் முன்னணிப் படையேயாகும். இரு பக்கங்களில் வருவன கைகோட்படை கை - பக்கம். பேரணி - படையின் நடுப்பகுதி. கடைக்கூழை - படையின் பின்பகுதி அணி. (கூழை என்பது குழை எனக் குறுகி நின்றது)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Herding together vanguard and front, both wings, main body and rear,
- he ranged his arrows in an array so close no needle could pass; they devoured lives;
- they reached the quarters and pierced through them, and ran on beyond; those on this side of them,
- what victory could they win to end the war, except to come before the Lord and fall?
What the poem says
Irāmaṉ's arrows drive every division of the demon army, the vanguard, the front line, the two wings, the main body and the rearguard, into one mass so tight that a needle could not pass through it. Then they take the demons' lives, fly on to the ends of the directions and pass beyond.
Those demons still within that range can do nothing but face Irāmaṉ, the Lord, and die; there is no victory left for them to win. The commentary explains each military term.