கம்பராமாயணம் 9493 · யுத்த 30.142
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஊன் நகு - தசைகள் விளங்கிய; வடிக் கணைகள் - கூர்மையான அம்புகள்; ஊழி அனல் ஒத்தன - ஊழிக்காலத்தில் (அனைத்தையும் எரித்தழிக்கும்) தீயை நிகர்த்தன; அரக்கர் உலர்ந்த உலவைக் கானகம் நிகர்த்தனர் - அரக்க வீரர்கள் காய்ந்து பட்டுப்போன காட்டை நிகர்த்தனர்; களித்த மத மா - வெறி கொண்ட மதம் பொழியும் யானைகள்; மலை ஒத்தன - மலைகளைப் போன்றிருந்தன; மானவன் வயப்பகழி - மனு குலத்தவனாகிய இராமன் ஏவிய வலிமை மிக்க அம்புகள்; வீசு வலை ஒத்தன - (கடலுள் வீசப்படுகின்ற வலையை நிகர்த்தன; கடற்படை - கடல் போலப் பெருகிய அரக்கரின் படைகள்; இனத்தொடும் விளிந்து உறுதலால் - இனத்தோடு (கூட்டமாக) இறந்துபடுவதால்; வளைப் புனலுள் வாழ் மீன்குலம் ஒத்தன - சங்குகள் நிரம்பிய கடலிலே வாழ்கின்ற மீன் கூட்டங்களை நிகர்த்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The sharp arrows gleaming with flesh were like the fire at the end of an age; the demons
- were like a forest of withered, dried-out trees; the frenzied must elephants were like mountains;
- the mighty arrows of the scion of Manu were like a net that is cast;
- and the sea-like army, perishing together with its kind, was like the shoals of fish that live in the conch-filled sea.
What the poem says
A series of comparisons. Irāmaṉ's arrows, glistening with flesh, are like the fire that burns the world at the end of an age, and the demons are like a dry, dead forest before it. The elephants are mountains.
His arrows are also like a fishing net cast into the sea, and the vast demon army, dying together in whole companies, is like the shoals of fish hauled up from the ocean. Irāmaṉ is called "Māṉavaṉ", descendant of Manu.