கம்பராமாயணம் 9494 · யுத்த 30.143

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஊழி இறுதிக் கடுகும் மாருதமும் ஒத்தனன், இராமன்; உடனே
பூழி என உக்கு உதிரும் மால் வரைகள் ஒத்தனர், அரக்கர், பொருவார்;
ஏழ் உலகும் உற்று உயிர்கள் யாவையும் முருக்கி, இறுதிக் கணில் எழும்
ஆழியையும் ஒத்தனன்; அம் மன்னுயிரும் ஒத்தனர், அலைக்கும் நிருதர்

பொருள் · Meaning in Tamil

இராமன் ஊழி இறுதிக் கடுகு மாருதமும் ஒத்தனன் - ஊழிக் காலத்து முடிவிலே விரைந்து வீசும் சண்ட மாருதத்தைப் போன்றவனானான்; பொருவார் அரக்கர் - அவனோடு போர் செய்கின்றவராகிய அரக்கர்கள்; பூழி என உக்கு உதிரும் - புழுதி யெனச் சொல்லும்படியாகப் பொடிபட்டு உதிர்கின்ற, மால் வரைகள் ஒத்தனர் - பெரிய மலைகளைப் போன்றவர் ஆனார்; ஏழ் உலகமும் உற்று - ஏழு உலகங்களையும் அடைந்து; உயிர்கள் யாவையும் முருக்கி - எல்லா உயிர்களையும் அழித்து; இறுதிக்கண் எழும் - யுக முடிவிலே பொங்குகின்ற; ஆழியையும் ஒத்தனன் - கடலைப் போன்றவன் ஆனான் (இராமன்); அலைக்கும் நிருதர் - உயிரினங்களைத் துன்புறுத்தும் அரக்கர்கள்; அம் மன் உயிரும் ஒத்தனர் - (ஊழிக் காலத்து அழிகின்ற) அந்த நிலையான உயிர்களை ஒத்தவர் ஆனார்.

மன் உயிர் - நிலையான உயிர். ஊழிக் காலத்து உயிர் அழியும் என்றது அக்காலத்து அவ் உயிர்கள் கொண்ட உடல் வாழ்வின் அழிவினைக் குறித்தது. உயிருக்கு அழிவில்லை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Irāmaṉ was like the rushing wind at the end of an age; and at once
  2. the demons who fought him were like great mountains crumbling and falling as dust;
  3. he was like the ocean that rises at the final hour, overruns the seven worlds
  4. and crushes all living things; and the tormenting demons were like those living beings.

What the poem says

More images of cosmic dissolution. Irāmaṉ is the hurricane that blows at the end of the age, and the demons are great mountains crumbling to dust before it. He is the ocean that rises at the end of time and floods all seven worlds, destroying every creature; the demons, tormentors of the world, are those creatures.

The commentary adds that it is the bodies of beings that perish at the dissolution; the souls themselves are eternal.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūḻi iṟutik kaṭuku mārutamum ottaṉaṉ, irāmaṉ; uṭaṉē
pūḻi eṉa ukku utirum māl varaikaḷ ottaṉar, arakkar, poruvār;
ēḻ ulakum uṟṟu uyirkaḷ yāvaiyum murukki, iṟutikkaṇiṉ eḻum
āḻiyaiyum ottaṉaṉ; am maṉṉuyirum ottaṉar, alaikkum nirutar