கம்பராமாயணம் 9497 · யுத்த 30.146
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வெள்ளம் ஒரு நூறு படும் வேலையின் - நூறு வெள்ள அளவு கொண்ட அரக்கர் சேனை அழியும் அந்த நேரத்தில்; அவ் வேலையும் இலங்கை நகரும் - இலங்கையைச் சூழ்ந்த அந்தக் கடலும் இலங்கை நகரமும்; பள்ளமொடு மேடு தெரியாத வகை - பள்ளம் எது மேடு எது என்று தெரியமுடியாதபடி; சோர் குருதி பம்பி எழலும் - சொரிகின்ற இரத்தம் பரவி எழுந்ததால்; உள்ளும் மதிலும் புறமும் ஒன்றும் அறியாது - இலங்கையின் உட்பகுதி மதில் எது, இலங்கையின் வெளிப்பகுதி எது என ஒன்றும் அறிய முடியாமல்; கள்ள நெடு மான் விழி அரக்கியர் - வஞ்சகம் கொண்டதும் மான் போன்ற மருட்சி கொண்டதுமான கண்ணுடைய அரக்க மாதர்கள்; கலக்கமொடு - மனம் கலங்கியதோடு; கால்கள் குலைவார் - கால் தடுமாறினவர்களாய்; அலறி ஓடினார்கள் - அலறிக்கொண்டு ஓடினார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At the hour when a hundred veḷḷams fell, the blood that streamed out
- welled up and spread over that sea and the city of Ilaṅkai till no hollow or height could be told apart;
- unable to tell inside from wall or wall from outside, they ran shrieking,
- the demon women with long, deceitful, doe-like eyes, their legs giving way in their terror.
What the poem says
As a hundred veḷḷams of the demon army are destroyed, their blood floods both the sea around Ilaṅkai and the city itself, until high ground and low can no longer be told apart. The demon women, with their long, deceptive, deer-like eyes, cannot tell the inner city from its walls or from the land outside. Panic-stricken and stumbling, they run screaming.