கம்பராமாயணம் 9498 · யுத்த 30.147

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நீங்கினர், நெருங்கினர் முருங்கினர், உலைந்து; உலகின் நீளும் மலைபோல்
வீங்கின, பெரும்பிணம் விசும்பு உற; அசும்புபடுசோரி விரிவுற்று,
ஓங்கின, நெடும்பரவை, ஒத்து உயர எத்திசையும் உற்று எதிர் உற;
தாங்கினர், படைத்தலைவர், நூறுசத கோடியர் தடுத்தல் அரியார்.

பொருள் · Meaning in Tamil

நீங்கினர் நெருங்கினர் முருங்கினர் - இராமனை விட்டு நீங்கினராய் (இழுக்கு நினைந்து மீண்டும்) அவனை நெருங்கி அழிந்தனர் (அரக்கர்), உலைந்து - சிதைவுற்று; உலகில் நீளும் மலைபோல் - நிலவுலகிலே நீண்டு கிடக்கும் மலைபோல; விசும்பு உற - ஆகாயத்தை அளாவி; பெரும் பிணம் வீங்கின - பெரிய பிணங்கள் பெருகிக் குவிந்தன; அசும்பு படு சோரி விரிவுற்று - (வீழ்ந்தவர் உடலிலிருந்து) ஊற்றெடுக்கும் இரத்தம் பெருகி; நெடும் பரவை ஒத்து - பெரிய கடல்களைப் போல; உயர - பெருக்கு அதிகமானதால்; எத்திசையும் உற்று - எல்லாத் திசைகளையும் அடைந்து; எதிர் உற - கடல்கள் யாவும் ஒன்றையொன்று எதிரெதிர் சேர; ஓங்கின -; நூறு சத கோடியர் - பதினாயிரம் கோடியராகிய; படைத்தலைவர் - அரக்கரின் படைத்தலைவர்கள்; தடுத்தல் அரியார் - இராமனைத் தடுத்து நிறுத்த முடியாதவராய், தாங்கினர் - எதிர்த்தனர்,

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They fell back, they pressed in, they were crushed and broken; like the long mountain ranges of the world
  2. the great corpses swelled up to the sky; the oozing blood spread out
  3. and rose like the wide oceans, reaching every direction till they met face to face;
  4. and then the captains of the army, a hundred times a hundred crores, hard to withstand, stood up to him.

What the poem says

The demons fall back, then, ashamed, press in again and are destroyed. Their huge corpses pile up like mountain ranges reaching the sky, and the blood that oozes from them rises like oceans, spreading in every direction until the seas of blood meet one another.

Now the demon commanders themselves, ten thousand crores of them and formidable foes, come forward to confront Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīṅkiṉar, neruṅkiṉar muruṅkiṉar, ulaintu; ulakil nīḷum malaipōl
vīṅkiṉa, perum piṇam vicumpu uṟa; acumpu paṭu cōri virivuṟṟu,
ōṅkiṉa, neṭum paravai, ottu uyara etticaiyum uṟṟu etir uṟa;
tāṅkiṉar, paṭait talaivar, nūṟu cata kōṭiyar taṭuttal ariyār.