கம்பராமாயணம் 9499 · யுத்த 30.148
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேரும், மத மாவும், வரை, ஆளியொடு, மிகு சீயம் முதலா - தேர் மதங்கொண்ட யானை, மலையில் வாழும் யாளி, வலிமை மிக்க சிங்கம் முதலிய; ஊரும் அவை யாவையும் - ஏறிச் செல்கின்ற அவை எல்லாவற்றையும்; நடாயினர் கடாயினர்கள், உந்தினர்கள் - இயக்கி நடத்திச் செலுத்தினார்கள்; காரும் - மேகமும்; உரும் ஏறும் - பேரிடிகளும்; எரி ஏறும் - பெரு நெருப்பும்; நிகர் வெம்படையோடு - ஒத்த கொடிய படைக்கலங்களோடு, அம்பு - அம்புகளை; கடிதின் தூரும் வகை தூவினர் - விரைவாக நிறையும்படி இறைத்தார்கள்; துரந்தனர்கள், எய்தனர் - மேலும் அவற்றை விரைவோடு செலுத்தியவர்களாய் குறிநோக்கிச் செலுத்தியவர்களாய்; தொடர்ந்தனர்கள் - தாம் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்தார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Chariots, must elephants, mountain yāḷis, horses, mighty lions and the rest,
- all the mounts they rode, they drove on, urged on, spurred forward;
- with fierce weapons like storm clouds, thunderbolts and blazing fire, they showered arrows
- fast enough to bury him; they hurled, they shot, they pressed the attack.
What the poem says
The demon commanders charge. They drive forward every kind of mount, chariots, elephants in must, yāḷis from the mountains, horses and great lions. They hurl weapons as fierce as storm clouds, thunderbolts and fire, and loose arrows so quickly that they seem about to bury Irāmaṉ under them, pressing the assault without pause.