கம்பராமாயணம் 9500 · யுத்த 30.149

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வம்மின், அட, வம்மின்! எதிர் வந்து, நுமது ஆர் உயிர் வரங்கள் பிறவும்,
தம்மின் 'என இன்னன மொழிந்து, எதிர் பொழிந்தன, தடுப்ப அரியவாம்
வெம்மின் என, வெம்பகழி வேலை என ஏயினன்; வெய்ய வினையோர்
தம் இனம் அனைத்தையும் முனைந்து எதிர் தடுத்தனன், தனித் தனி அரோ.

பொருள் · Meaning in Tamil

வம்மின் அட வம்மின் - வாருங்கள் அட! வாருங்கள்; எதிர் வந்து - என எதிரே வந்து; நுமது ஆருயிர் வரங்கள் பிறவும் - உங்களுடைய அரிய உயிரையும் வரங்களையும் இன்னும் மற்றவற்றையும், தம்மின் - என்னிடம் தந்து விடுங்கள்; என இன்னன மொழிந்து - என்று இத்தகைய சொற்களைச் சொல்லி; எதிர் பொழிந்தன - அரக்கர்களை எதிர்த்துப் பெய்தனவும்; தடுப்பு அரியவாம் - தடுத்து நிறுத்துதற்கு அரியவாயினவும் ஆகிய; வெம் பகழி - கொடிய அம்புகளை; வெம் மின் என - வேக்காடு மிக்க மின்னலைப் போலவும்; வேலை என - கடலைப் போலவும்; ஏயினன் - (இராமபிரான் ஏவினான்; அவ் வெய்ய வினையோர் தம் இனம் அனைத்தையும் - அந்த கொடிய வினைப்பயனை அனுபவிப்போராகிய அரக்கர் கூட்டம் முழுவதையும், முனைந்து தனித்தனி எதிர் தடுத்தனன் - ஊக்கத்தோடு தனித்தனியே எதிர் தடுத்தனன் இராமன்.

அரோ: அசை,

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Come on, you, come on! Come up and hand over
  2. your precious lives, your boons and all the rest!" Saying such things, he loosed fierce arrows
  3. that poured against them, hard to stop, like searing lightning, like the sea;
  4. and he engaged and checked the whole host of those doers of cruel deeds, every one of them, one by one.

What the poem says

Irāmaṉ taunts the demon commanders: let them come and surrender to him their lives, their boons and everything else they have. Then he looses arrows like scorching lightning and as countless as the waves of the sea, impossible to stop, and meets and holds back every one of these wicked warriors individually. The closing particle is a metrical filler.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vammiṉ, aṭa, vammiṉ! etir vantu, numatu ār uyir varaṅkaḷ piṟavum,
tammiṉ 'eṉa iṉṉaṉa moḻintu, etir poḻintaṉa, taṭuppa ariyavām
vem miṉ eṉa, vem pakaḻi vēlai eṉa ēyiṉaṉ; av veyya viṉaiyōr
tam iṉam aṉaittaiyum muṉaintu etir taṭuttaṉaṉ, taṉit taṉi arō.