கம்பராமாயணம் 9501 · யுத்த 30.150

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அக்கணையை அக்கணம் அறுத்தனர் செறுத்து, இகல் அரக்கர் அடைய,
புக்கு அணையல் உற்றனர், மறைத்தனர் புயற்கு அதிகம் வாளி பொழிவார்,
திக்கு அணை வகுத்தனர் எனச் செல நெருங்கினர்; செருக்கின் மிகையால்;
முக்கணனை உற்று அடி வணங்கி இமையோர் இவை மொழிந்தனர்களால்.

பொருள் · Meaning in Tamil

இகல் அரக்கர் அடையப் புக்கு - பகைமையுள்ள அரக்கர்கள் எல்லாரும் சேரவந்து; அணையலுற்றனர் - இராமபிரானை நெருங்கியவர்களாய்; அக்கணம் - அந்தக் கணத்திலேயே; அக்கணையை - இராமபிரான் செலுத்திய அந்த அம்பினை; செறுத்து - சினந்து; அறுத்தனர் - சிதைத்தனர்; மறைத்தனர் - இராமனைச் சூழ்ந்து மறைத்தார்கள்; புயற்கு அதிகம் வாளி பொழிவார் - மேகம் (மழை பொழிவதைவிட) மிகுதியாக அம்பினைப் பொழிவாராகி; திக்கு அணை வகுத்தனர் என - திசைகளுக்கு ஓர் அணை அமைத்து விட்டனர் என்னும்படியாக; செருக்கின் மிகையால் - ஆணவ மிகுதியால்; செல நெருக்கினர் - மிகவும் நெருக்கினார்கள்; இமையோர் - (இதனைக் கண்ட) தேவர்கள்; முக்கணனை உற்று - சிவபெருமானை அடைந்து; அடி வணங்கி - திருவடிகளை வணங்கி; இவை மொழிந்தனர்கள் - (பின்வரும்) இவற்றைச் சொன்னார்கள்.

அடைய - முழுமையாக, திருவரங்கத்தில் எல்லா மதில்களையும் உள்ளடக்கி கடைசியாகவுள்ள மதிலை அடைய வளைந்தான் என்று சொல்லும் வழக்கினை நினைக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In fury the hostile demons cut those arrows apart that very instant; all of them
  2. came pressing in and closed round him; they hid him, pouring arrows thicker than the clouds pour rain;
  3. in the excess of their pride they pressed so hard it seemed they had built a dam across the quarters;
  4. and the unblinking gods went to the Three-eyed One, bowed at his feet, and said these words.

What the poem says

The demon commanders, enraged, cut Irāmaṉ's arrows apart in mid-air. Then all of them close in together and hide him from sight under a storm of arrows denser than any rain cloud, so thick it seems they have walled off every direction.

Seeing this, the gods hurry in alarm to Civaṉ, the three-eyed god, bow at his feet and speak to him. The commentary notes the sense of "aṭaiya", "all together, completely".

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ak kaṇaiyai ak kaṇam aṟuttaṉar ceṟuttu, ikal arakkar aṭaiya,
pukku aṇaiyaluṟṟaṉar, maṟaittaṉar puyaṟku atikam vāḷi poḻivār,
tikku aṇai vakuttaṉar eṉac cela nerukkiṉar; cerukkiṉ mikaiyāl;
mukkaṇaṉai uṟṟu aṭi vaṇaṅki imaiyōr ivai moḻintaṉarkaḷāl.