கம்பராமாயணம் 9502 · யுத்த 30.151

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'படைத் தலைவர் உற்று ஒருவர் மும்மடி இராவணன் எனும் படிமையோர்;
கிடைத்தனர் அவர்க்கு ஒரு கணக்கு இலை; வளைத்தனர் கிளர்ந்து உலகு எலாம்
அடைத்தனர், தெழித்தனர், அழித்தனர், தனித்து உளன் இராமன், அவரோ
துடைத்தனர் எம் வெற்றி என உற்றனர்; இனிச் செயல் பணித்தி சுடரோய்!

பொருள் · Meaning in Tamil

சுடரோய் - ஒளி மேனியனே! படைத்தலைவர் ஒருவர் மும்மடி இராவணன் எனும் படிமையோர் உற்று - படைத்தலைவர், ஒவ்வொருவரும் மும்மடங்கு இராவணர்கள் என்று சொல்லத்தக்க உருவம் உடையவராய் வந்து; கிடைத்தனர் - இராமனை நெருங்கியிருக்கின்றார்கள்; அவர்க்கு ஒரு கணக்கு இலை - அப்படி நெருங்கி விட்ட அரக்கர்களுக்கு ஒரு கணக்கு இல்லை; வளைத்தனர் கிளைத்து - இராமனைச் சூழ்ந்து கொண்டு கிளர்ந்தெழுந்து; உலகு எலாம் அடைத்தனர் - உலகம் முழுவதையும் அடைத்துக்கொண்டு; தெழித்தனர், அழித்தனர் - அதட்டிக் கொண்டு அழிக்கத் தொடங்கி விட்டார்கள்; தனித்துளன் இராமன் - இராமன் தன்னந் தனியாக இருக்கிறான்; அவரோ - அந்த அரக்கர்களோ; துடைத்தனர் எம் வெற்றி என உற்றனர் - (எமக்குக் கிடைத்துவிட்டதென்று நாங்கள் எண்ணிக்கொண்டிருந்த) வெற்றியை அழிக்கின்றனர்; இனிச் செயல் பணித்தி - இனி நடக்கப்போகும் நிகழ்ச்சிகள் இவையெனக் கூறுக என (கலங்கிக்) கூறினர்

எவ்வளவு ஈடுபாடு கொண்ட பக்தர்களும் தளர்வோராகி இறைவன் ஆற்றலை மறந்துவிடுவதுண்டு என்ற மெய்ம்மைகளை உணர்த்துகிறது இமையோர் செயல். அடுத்து வரும் பாடலும் அவ்வகையினதே.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The army's captains have come, each one of them in form three Irāvaṇaṉs over;
  2. there is no counting those who have reached him; they have closed round, revelling, and blocked the whole world;
  3. they roar, they destroy; Irāmaṉ is alone; and they
  4. have come on as if to wipe out our victory; tell us now what will happen, Radiant One!"

What the poem says

The frightened gods speak to Civaṉ. Each demon commander is as huge as three Irāvaṇaṉs, and there are countless of them. They have surrounded Irāmaṉ and fill the whole world, roaring and destroying, while he stands alone. The victory the gods thought was theirs is being snatched away. They beg Civaṉ to tell them what will happen next.

The commentary observes that even the most devoted can lose heart and forget the power of God, and that the next verse shows the same thing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'paṭait talaivar uṟṟu oruvar mum maṭi irāvaṇaṉ eṉum paṭimaiyōr;
kiṭaittaṉar avarkku oru kaṇakku ilai; vaḷaittaṉar tiḷaittu ulaku elām
aṭaittaṉar, teḻittaṉar, aḻittaṉar, taṉittu uḷaṉ irāmaṉ, avarō
tuṭaittaṉar em veṟṟi eṉa uṟṟaṉar; iṉic ceyal paṇitti cuṭarōy!