கம்பராமாயணம் 9503 · யுத்த 30.152
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எய்த கணை - இராமனால் எய்யப்பட்ட அம்பு; எய்துவதன் முன்பு - இலக்கினை அடைவதற்கு முன்பே; இடை அறுத்து - நடு வழியிலேயே முறித்து; இவர்கள் - இந்த அரக்கர்கள்; பெய்த கணை மா முகில் என - இராமனை எதிர்த்துச் செலுத்திய அம்புகள் பெரிய மேகத்திரள் என்று சொல்லும்படியாக; புடை வளைத்தனர் - பக்கங்களில் சூழ்ந்தவர்களாய்; போய்ப் பிடித்தனர்கள் - முன்னேறிப் பிடித்துக்கொண்டனர்; வைது கொலின் அல்லது - இவ் அரக்கர்களைச் சாபம் இட்டுக் கொன்றால் அல்லாமல்; மறப்படை கொடிப்படை - வீரப் படைக்கலங்களாலோ கொடி ஏந்தி நடக்கும் காலாட்படைகளாலோ; கடக்கும் வலி - வெல்லும் வல்லமை; செய்ய திருமாலொடு உனக்கும் அரிது - செம்மை நெறி பேணும் திருமாலுக்கும் உனக்கும் இல்லை; என்றனர் - என்று கூறி; திகைத்து விழுவார் - திகைத்துத் தளர்ந்தனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Cutting his arrows apart midway before they reach their mark, these demons
- have closed round on every side, their arrows poured out like great clouds over the seven worlds, and gone in and seized hold;
- unless one curses them and they depart, the power to overcome them with weapons of war or bannered armies
- is beyond even the fair Tirumāl and beyond you," they said, and fell down bewildered.
What the poem says
The gods continue in despair. The demons cut Irāmaṉ's arrows in two before they can strike, surround him with a cloud of arrows that covers the seven worlds, and are closing in to seize him.
Only a curse could get rid of them. Neither Viṣṇu nor Civaṉ himself, they say, could defeat them with weapons and armies. Having said this, they collapse in confusion. The commentary reads the third line as "unless one kills them by a curse".