கம்பராமாயணம் 9504 · யுத்த 30.153

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அஞ்சி அயரன்மின்! அவர் எத்தனையர் ஆயிடினும், அத்தனைவரும்,
பஞ்சி எரி உற்றது என, வெந்து அழிவர் : இந்த உரை பண்டும் உளதால்;
நஞ்சம் அமுதத்தை நனிவென்றிடினும், நல் அறம் நடக்கும் அதனை
வஞ்ச வினை பொய்க் கருமம் வெல்லினும், இராமனை அவ் வஞ்சகர் கடவார்.

பொருள் · Meaning in Tamil

அஞ்சி அயரன்மின் - நீங்கள் அஞ்சித் தளராதீர்கள்; அவர் எத்தனையர் ஆயிடினும் - அந்த அரக்கர்கள் எத்தனை பேராக இருந்தாலும்; அத்தனைவரும் - அத்தனை பேர்களும்; பஞ்சி எரி உற்றதென - பஞ்சில் நெருப்புப் பற்றியதைப் போல; வெந்து அழிவர் - எரிந்து சாவார்கள்; இந்த உரை பண்டும் உளது - இந்தச் செய்தி பழங்காலத்திலிருந்து இருப்பதுதான்; நஞ்சம் அமுதத்தை நனி வென்றிடினும் - நஞ்சு அமுதத்தை மிகவே வென்றாலும்; நடக்கும் நல் அறம் அதனை - நடைபெறுகின்ற நல்ல அறத்தை, வஞ்ச வினை பொய்க் கருமம் வெல்லினும் - வஞ்சகச் செயல்களும் பொய்ம்மைச் செயல்களும் வென்றாலும்; இராமனை இவ் வஞ்சகர் கடவார் - இராமபிரானை இந்த வஞ்சகர்கள் வெல்ல மாட்டார்கள்.

வென்றிடினும், வெல்லினும் என்பவற்றில் உள்ள உம்மைகள் அவை வெல்லமாட்டா என்ற எதிர்மறைப் பொருளைத் தந்தன. தீமை வெல்வது போன்ற தோற்றம் ஏற்படினும் இறுதியில் அறமே வெல்லும் என்பது இந்த நாட்டுப் பண்பாட்டு நம்பிக்கை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Do not be afraid and lose heart! However many they may be, all of them
  2. will burn up and perish like cotton caught by fire; this saying is an old one;
  3. even if poison should utterly defeat nectar, even if treacherous deeds and false works
  4. should overcome good dharma as it takes its course, these deceivers will not overcome Irāmaṉ."

What the poem says

Civaṉ reassures the gods. However many the demons are, they will all burn up like cotton touched by fire; this has long been foretold.

Poison might sooner defeat nectar, and deceit and falsehood might sooner overcome righteousness, than these treacherous demons defeat Irāmaṉ. The commentary explains that the "even if" clauses imply that such things will never really happen: even when evil seems to win, dharma triumphs in the end.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'añci ayaraṉmiṉ! avar ettaṉaiyar āyiṭiṉum, attaṉaivarum,
pañci eri uṟṟateṉa, ventu aḻivar: inta urai paṇṭum uḷatāl;
nañcam amutattai naṉi veṉṟiṭiṉum, nal aṟam naṭakkum ataṉai
vañca viṉai poyk karumam velliṉum, irāmaṉai iv vañcar kaṭavār.