கம்பராமாயணம் 9505 · யுத்த 30.154

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அரக்கர் உளர் ஆர்சிலர், அவ் வீடணன் அலாது, உலகின் ஆவி உடையார்?
இரக்கம் உளது ஆகியது; நல் அறம் எழுந்து வளர்கின்றது; இனிநீர்
கரக்க, முழைதேடி உழல்கின்றிலிர்கள்; இன்று ஒரு கடும்பகலிலே
குரக்கின் முதல் நாயகனை ஆளுடைய கோள் உழுவை கொல்லும், இவரை.

பொருள் · Meaning in Tamil

அவ் வீடணன் அலாது - அந்த வீடணனைத் தவிர; உலகில் - இந்த உலகத்தில்; அரக்கர் சிலர் ஆவி உடையார் உளர் ஆர் - அரக்கருள் சிலராய் உயிருடையவர்களாய் இனி இருக்கப் போகிறவர்கள் யார்? (யாரும் இரார்); இரக்கம் உளது ஆகின் - இரக்கம் என்ற ஒரு தத்துவம் இருப்பது உண்மையாயின்; அது நல் அறம் எழுந்து வளர்கின்றது - அதனால் நல்ல அறம் உயர்ந்து வளர்வதாகிறது; இனி நீர் கரக்க - இனிமேல் நீங்கள் ஒளிந்து கொள்வதற்கு; முழை தேடி - குகைகளைத் தேடி; உழல்கின்றிலிர்கள் - துன்பப்பட வேண்டியதில்லை; இன்று ஒரு கடும் பகலிலே - இன்றைய கடும் பகலிலேயே; குரக்கின் முதல் நாயகனை ஆளுடைய - வானரங்களின் முதல் தலைவனாகிய சுக்கிரீவனை அடிமையாகக் கொண்ட, கோள் உழுவை - குறிதப்பாத புலியாகிய இராமன்; இவரைக் கொல்லும் - இந்த அரக்கர்களைக் கொல்வான்.

'கண்ணோட்டம் என்னும் கழிபெருங்காரிகை உண்மையான் உண்டு இவ் உலகு' (குறள் 571) கண்ணோட்டத்து உள்ளது உலகியல் (குறள் 572) என்ற வள்ளுவர் வாய்மொழிகள் இங்கு நினையத் தக்கன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Apart from that Vīṭaṇaṉ, which of the demons will be left in the world with life in them?
  2. If compassion exists, it is because good dharma rises and grows; from now on
  3. you need not wander seeking caves to hide in; this very day, in one fierce noon,
  4. the deadly tiger who has the first chief of the monkeys for his servant will kill them."

What the poem says

Civaṉ continues. Apart from Vīṭaṇaṉ, who has taken refuge with Irāmaṉ, not one demon in the world will remain alive. Compassion exists in the world only because righteousness rises and prospers, and it will prosper now.

The gods need no longer hunt for caves to hide in. Before this one fierce day is over, Irāmaṉ, a tiger who never misses its prey and master of Cukkirīvaṉ, will kill them all. The commentary recalls the Tirukkuṟaḷ (571–572) on kindness as what sustains the world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'arakkar uḷar ār cilar, av vīṭaṇaṉ alātu, ulakiṉ āvi uṭaiyār?
irakkam uḷatu ākiṉ, atu nal aṟam eḻuntu vaḷarkiṉṟatu; iṉi nīr
karakka, muḻai tēṭi uḻalkiṉṟilirkaḷ; iṉṟu oru kaṭum pakalilē
kurakkiṉ mutal nāyakaṉai āḷuṭaiya kōḷ uḻuvai kollum, ivarai.