கம்பராமாயணம் 9506 · யுத்த 30.155

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்று பரமன் பகர, நான்முகனும் அன்ன பொருளே இசைதலும்,
நின்று நிலை ஆறினர்கள் வானவர்கள்; மானவனும் நேமி எனலாம்
வென்று நெடு வாளி மழை, மாரியினும் மேலன துரந்து, விரைவில்
கொன்று, குல மால் வரைகள் மானு தலை மாமலை குவித்தனன் அரோ.

பொருள் · Meaning in Tamil

என்று பரமன் பகர - மேற்கண்டவாறு சிவபெருமான் கூற; நான்முகனும் அன்ன பொருளே இசைதலும் - பிரமனும் அந்தக் கருத்தே சரி என உடன்பட; வானவரும் - தேவர்களும்; நின்று - (மனத்தால் உறுதிபட) நின்று; நிலை ஆறினர்கள் - (கலங்கிய) நிலை மாறி ஆறுதல் அடைந்தனர்; மானவனும் - மனு வமிசத்தவனான இராமனும்; நேமி எனல் ஆம் - சக்கராயுதம் என்று சொல்லத்தக்க; வென்றி நெடு வாளி மழை - வெற்றி விளைப்பனவும் நெடியனவுமாகிய அம்புகளாகிய மழையினை; மாரியினும் மேலன துரந்து - மேகத்தை விட அதிகமாக விரையச் செலுத்தி; விரைவின் கொன்று - விரைவாக அரக்கரைக் கொன்று; வரைகள் மானு(ம் தலை - மலைகளை ஒத்த தலைகளை; மா மலை - (மலைகளின் அடுக்காகிய) பெரிய மலையாக; குவித்தனன்...

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the Supreme One spoke thus, and the Four-faced One too agreed to the same,
  2. the gods stood firm and were comforted; and the son of Manu, loosing
  3. a rain of long, victorious arrows like the discus, more than any downpour,
  4. swiftly killed and heaped up the heads, like great clan mountains, into a vast mountain.

What the poem says

Civaṉ has spoken, and Piramaṉ, the four-faced creator, agrees with him. The gods steady themselves and are comforted.

Irāmaṉ, descendant of Manu, looses a storm of long, conquering arrows as deadly as Viṣṇu's discus and thicker than any rain. He swiftly kills the demons and piles up their mountain-sized heads into one enormous mountain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu paramaṉ pakara, nāṉmukaṉum aṉṉa poruḷē icaitalum,
niṉṟu nilai āṟiṉarkaḷ vāṉavarum; māṉavaṉum nēmi eṉal ām
veṉṟi neṭu vāḷi maḻai, māriyiṉum mēlaṉa turantu, viraiviṉ
koṉṟu, kula māl varaikaḷ māṉu talai mā malai kuvittaṉaṉ arō.