கம்பராமாயணம் 9508 · யுத்த 30.157

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உகளும் இவுளி தலை துமிய உறுகழல்கள்
தகளியுற வலிய தலைகள் அறு தலைவர்
துகளின் உடல்கள் விழ உயிர்கள் சுரர் உலகின்
மகளிர் வன முலைகள் தழுவி அகம் மகிழ.

பொருள் · Meaning in Tamil

உறு கழல்கள் - வலிமை மிகு கால்கள்; தகளி அற - அகல் விளக்குப் போல் துண்டாகிட; வலிய தலைகள் அறு தலைவர் - வன்மை மிக்க தலைகள் அறுபட்ட வீரத் தலைவர்களின்; உடல்கள் துகளின் விழ - உடல்கள் (தரைப்) புழுதியிலே விழ; உயிர்கள் - அவர்களின் உயிர்கள்; சுரர் உலகின் - தேவர் உலகத்தில் உள்ள; மகளிர் வன முலைகள் தழுவி - பெண்களின் அழகிய மார்பினைத் தழுவி; அகம் மகிழ - மனம் மகிழ; இவுளி தலைதுமிய - அவர்கள் ஏறிவந்த குதிரைகள் தலை துண்டிக்கப்பட்டு; உகளும் - (தரையிலே) புரளும்.

வீரர்களின் கால்களும் தலைகளும் அறுபட்டு, உடல்கள் புழுதியிலே புரண்டன. அவர்களின் உயிர்கள் சுவர்க்க மகளிரைத் தழுவி மகிழ்ந்தன. குதிரைகள் தலை அறுபட்டு நிலத்திலே புரண்டன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The leaping horses had their heads cut off; their strong, anklet-bearing legs
  2. were cut off like lamp-saucers; as the bodies of the chiefs whose mighty heads were severed
  3. fell into the dust, their souls, in the world of the gods,
  4. embraced the lovely breasts of its women, and their hearts rejoiced.

What the poem says

The horses are beheaded and fall thrashing; the demon chiefs' strong, anklet-wearing legs are severed like the shallow clay saucers of oil lamps, and their heads cut off. Their bodies fall into the dust.

But because they died in battle, their souls rise to heaven, where they embrace the celestial women and rejoice. This was the reward a warrior's death was believed to bring.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ukaḷum ivuḷi talai tumiya uṟu kaḻalkaḷ
takaḷi aṟa valiya talaikaḷ aṟu talaivar
tukaḷiṉ uṭalkaḷ viḻa uyirkaḷ curar ulakiṉ
makaḷir vaṉa mulaikaḷ taḻuvi akam makiḻa.