கம்பராமாயணம் 9510 · யுத்த 30.159

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இனைய செருநிகழும் அளவின் எதிர்பொருத
வினையமுடை முதல்வர் எவரும் உடன் விளிய.
அனைய படை நெளிய வயவர் அழி குருதி
நனைய விசையின் எழுதுவலை மழை நலிய.

பொருள் · Meaning in Tamil

இனைய செரு நிகழும் அளவின் - இத்தகைய போர் நடக்கும் போது; எதிர் பொருத - இராமனுக்கு எதிராகப் போர் செய்த; வினையமுடை முதல்வர் எவரும் - வஞ்சனை கொண்ட (அரக்கத்) தலைவர்கள் எல்லோரும்; உடன் விளிய - ஒருங்கே அழிந்ததனால்; அனைய படை - அந்த (அரக்கர்) சேனை; நெளிய - தளர்ந்திட; அமரர் சொரி மலர்கள் நனைய - (மகிழ்ச்சி கொண்ட) தேவர்கள் சொரிந்த மலர்களின் அரும்புகளிலிருந்து; விசையின் எழு துவலை மழை நலிய - வேகமாக எழுந்து பொழிகின்ற (தேன்) மழை வருத்துவதால் (தொடரும்)

வெல்வோர் உவகை தோற்போர்க்கு அவலம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While a battle such as this raged on, the chiefs who fought against him,
  2. masters of guile, all perished together;
  3. that army wavered, and as the flowers the gods showered were drenched,
  4. a rain of spray rising swiftly from them pressed hard upon it.

What the poem says

The great final battle against Irāvaṇaṉ's reserve host, the Mūlapalam, goes on, with Irāmaṉ fighting it alone. This verse opens a linked sequence whose sense runs on into the following verses.

The demon leaders who stood against him have all fallen at once and their army falters. Above, the delighted gods rain down flowers, and the honey that sprays from those blossoms falls like a shower that adds to the defeated host's distress. The verse sets the joy of the victors against the misery of the vanquished.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉaiya ceru nikaḻum aḷaviṉ etir poruta
viṉaiyamuṭai mutalvar evarum uṭaṉ viḷiya.
aṉaiya paṭai neḷiya amarar cori malarkaḷ
naṉaiya vicaiyiṉ eḻu tuvalai maḻai naliya.